பிரதமர் அலுவலகம்

ஸ்ரீ குருநானக் தேவ் அவர்களின் 553வது ஜெயந்தி விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார்

Posted On: 07 NOV 2022 10:14PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று புது தில்லியில் ஸ்ரீ குருநானக் தேவ் அவர்களின் 553வது ஜெயந்தி  கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தார். பிரதமருக்கு சால்வை, சிரோபா மற்றும் வாள் வழங்கி மரியாதை செலுத்தப்பட்டது.

 

விழாவில் உரையாற்றிய பிரதமர் குரு ஜெயந்தி, தேவ் தீபாவளி ஆகிய நன்னாளில்  அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார். குரு கோவிந்த் சிங் அவர்களின் 350 வது ஜெயந்தி, குரு தேஜ் பகதூர் அவர்களின் 400 வது ஜெயந்தி மற்றும் குரு நானக் தேவ் அவர்களின் 550 வது ஜெயந்தி விழா போன்ற முக்கிய பிரகாஷ் பர் எனப்படும் ஒளிகளுக்கான விழாக்களைக் கொண்டாடும் வாய்ப்பைப் பெற்றதற்காக அவர் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்தார். "இந்த மங்களகரமான நிகழ்வுகளின் உத்வேகம் மற்றும் ஆசீர்வாதங்கள் புதிய இந்தியாவின் ஆற்றலை மேம்படுத்துகிறது. ஒவ்வொரு பிரகாஷ் பர்வின் ஒளியும் நாட்டிற்கு பிரகாசமான ஆதாரமாக செயல்படுகிறது" என்று பிரதமர் கூறினார். சீக்கிய சமூகத்தால் பின்பற்றப்படும் பிரகாஷ் பர்வின் பொருள் கடமை மற்றும் அர்ப்பணிப்பின் தேசிய பாதையை காட்டுகிறது என்று அவர் விளக்கினார். இந்த புனித சந்தர்ப்பங்களில் குரு கிருபா, குர்பானி மற்றும் லங்கர் கா பிரசாத் மீது பிரதமர் தமது பக்தியை வெளிப்படுத்தினார். "இது உள் அமைதியை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அர்ப்பணிப்புடன் சேவை செய்வதற்கான விருப்பத்தையும் நித்தியமாக வைத்திருக்கிறது" என்று அவர்  கூறினார்.

 

“குரு நானக் தேவ் அவர்களின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு, 130 கோடி இந்தியர்களின் நலனுக்காக நாடு முன்னேறி வருகிறது” என்று பிரதமர் கூறினார். ஆன்மீக ஞானம், உலக செழிப்பு மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கான குரு நானக் தேவ் அவர்களின் போதனைகளை பிரதமர் நினைவு கூர்ந்தார்.

"குர்பானியிடம் இருந்து நாம் பெற்ற வழி, பாரம்பரியம், நம்பிக்கை மற்றும் வளர்ந்த இந்தியாவின் பார்வை" என்று அவர் கூறினார்.

 

நிலைத்து நிற்கும் குருவின் போதனையை சுட்டிக்காட்டிய பிரதமர், “குரு கிரந்த் சாஹிப் வடிவில் நமக்குக் கிடைத்திருக்கும் அமிர்தத்தின் மகிமை, அதன் முக்கியத்துவம் காலம் மற்றும் புவியியல் எல்லைக்கு அப்பாற்பட்டது. நெருக்கடி பெரிதாகும்போது, இந்தத் தீர்வுகளின் பொருத்தம் இன்னும் அதிகமாகிறது என்பதையும் நாம் காண்கிறோம். உலகில் அமைதியின்மை மற்றும் அமைதியற்ற காலங்களில், குரு சாஹிப்பின் போதனைகளும் குரு நானக் தேவ் அவர்களின் வாழ்க்கையும் ஒரு ஜோதியைப் போல உலகிற்கு வழிகாட்டுகின்றன. நமது குருக்களின் இலட்சியங்களை நாம் எவ்வளவு அதிகமாக பின்பற்றுகிறோமோ, அந்த அளவுக்கு ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற உணர்வை நாம் உள்வாங்கிக் கொள்கிறோம், மனித நேய விழுமியங்களுக்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அந்த அளவுக்கு குருவின் போதனைகள் வலுவோடும், தெளிவாகவும் உள்ளன என்று பிரதமர் கூறினார்.

குருநானக் தேவ் அவர்களின் ஆசீர்வாதத்தால், கடந்த 8 ஆண்டுகளில் சீக்கியர்களின் மகத்தான பாரம்பரியத்திற்கு சேவை செய்யும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்துள்ளது என்று பிரதமர் கூறினார். “குருக்களின் ஆசீர்வாதத்துடன், இந்தியா தனது சீக்கிய பாரம்பரியத்தின் மகிமையை மேம்படுத்தி முன்னேற்றப் பாதையில் தொடர்ந்து செல்லும் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது” என்று கூறி பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

************

MSV/PKV/IDS



(Release ID: 1874433) Visitor Counter : 140