அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
நவீன ஆராய்ச்சியுடன் பாரம்பரிய அறிவை இணைப்பது கற்பனைக்கு அப்பாற்பட்ட பயன்களை வழங்கும் ; மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
Posted On:
05 NOV 2022 6:09PM by PIB Chennai
மத்திய அறிவியல் & தொழில்நுட்பம், அணுசக்தி மற்றும் விண்வெளி துறை இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங், நேற்றைய கற்பனை கதைகளை விஞ்ஞானம் இன்றைய யதார்த்தமாக மாற்றிவிட்டதாகவும், எனவே நவீன ஆராய்ச்சியுடன் பாரம்பரிய அறிவின் உகந்த அளவில் சேர்ப்பது கற்பனைக்கு அப்பாற்பட்ட பயன்களை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.
டேராடூனில் உள்ள உத்தராஞ்சல் பல்கலைக்கழக வளாகத்தில் ஆகாஷ் தத்வா- “ஆகாஷ் ஃபார் லைஃப்” என்ற தலைப்பில் 4 நாள் தேசிய மாநாட்டில் உரையாற்றிய டாக்டர் ஜிதேந்திர சிங், இந்தியாவின் அறிவியல், தொழில்நுட்பத்திற்கு உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற பிரதமர் நரேந்திர மோடி உதவியுள்ளார். திறன் மேம்பாடு மற்றும் நானோ செயற்கைக்கோள்கள் உள்ளிட்ட செயற்கைக்கோள் உருவாக்கம் ஆகியவற்றில் வளரும் நாடுகளுக்கு உதவுவதால், முழு உலகமும் இந்தியாவை ஒரு உத்வேகமான இடமாக பார்க்கிறது, என்றார்.
கடந்த எட்டு ஆண்டுகளில் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் அறிவியல் நோக்கங்களுக்காக பிரதமர் மோடியின் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் ஊக்கத்தால் இவை அனைத்தும் சாத்தியமாகியுள்ளன என்று அமைச்சர் கூறினார். அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை உலகின் முன்னணி அறிவியல் சக்தியாக மாற்றுவதற்கான பங்கை அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகள் வரையறுக்கும் என்றும் அவர் கூறினார்.
மூத்த ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதி பையாஜி ஜோஷி, உத்தராகண்ட் முதமைச்சர் திரு புஷ்கர் சிங் தாமி, உத்தராஞ்சல் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜிதேந்தர் ஜோஷி, இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர், பேராசிரியர் அஜய் குமார் சூட், இஸ்ரோ தலைவர், எஸ். சோமநாத், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப செயலாளர் டாக்டர் எஸ்.சந்திரசேகர். பயோடெக்னாலஜி துறை செயலாளர், டாக்டர் ராஜேஷ் எஸ் கோகலே , பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
*********
(Release ID: 1874000)
Visitor Counter : 215