மத்திய அமைச்சரவை
அருணாச்சலப்பிரதேச தலைநகர் இட்டா நகர், ஹாலோங்கியில் உள்ள பசுமை விமான நிலையத்தின் பெயரை “டோன்யி போலோ விமான நிலையம், இட்டா நகர்” என்று பெயர் மாற்றம் செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல்
இடுகை இடப்பட்ட நாள்:
02 NOV 2022 3:04PM by PIB Chennai
அருணாச்சலப்பிரதேச தலைநகர் இட்டா நகர், ஹாலோங்கியில் உள்ள பசுமை விமான நிலையத்தின் பெயரை “டோன்யி போலோ விமான நிலையம், இட்டா நகர்” என்று பெயர் மாற்றம் செய்வதற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மாநிலத்தின் நாகரீகம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் வகையில் மக்கள் வணங்கும் சூரியன் (டோன்யி) நிலவு (போலோ) ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் டோன்யி போலோ விமான நிலையம், இட்டா நகர் என்று பெயர் சூட்டுவதற்கு அருணாச்சலப்பிரதேச மாநில சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஹாலோங்கி பசுமை விமான நிலைய மேம்பாட்டிற்கு மத்திய அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒப்புதல் வழங்கியது. மத்திய மற்றும் அருணாச்சலப்பிரதேச மாநிலங்களின் உதவியுடன் இந்திய விமான நிலைய ஆணையம் ரூ.646 கோடி செலவில் மேம்பாட்டுப் பணியை செய்தது.
**************
SM/IR/RR/IDS
(வெளியீட்டு அடையாள எண்: 1873072)
வருகையாளர் எண்ணிக்கை : 252
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam