பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை

இடுகை இடப்பட்ட நாள்: 30 OCT 2022 12:07PM by PIB Chennai

சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அன்னாருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

 

ட்விட்டர் பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது:

 

“பெருமதிப்பிற்குரிய  பசும்பொன் முத்துராமலிங்க தேவரை அவரது குருபூஜை நாளில் வணங்குகிறேன். சமூக மேம்பாடு, விவசாயிகள் நலன், வறுமை ஒழிப்பு முதலியவை உட்பட நம் தேசத்திற்காக அவர் ஆற்றிய தலைசிறந்த பங்களிப்பை நினைவு கூர்கிறேன். அவரது கொள்கைகள் நம்மை தொடர்ந்து ஊக்குவிக்கும்.”

 

**************


(வெளியீட்டு அடையாள எண்: 1871971) வருகையாளர் எண்ணிக்கை : 269