உள்துறை அமைச்சகம்

ஹரியானாவின் சூரஜ்கண்டில் 2022 அக்டோபர் 27, 28 தேதிகளில் நடைபெறும் மாநிலங்களின் உள்துறை அமைச்சர்களுக்கான சிந்தனை முகாமுக்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமை தாங்குவார்

Posted On: 26 OCT 2022 1:18PM by PIB Chennai

ஹரியானாவின் சூரஜ்கண்டில் 2022 அக்டோபர் 27, 28 தேதிகளில் நடைபெறும் மாநிலங்களின் உள்துறை அமைச்சர்களுக்கான சிந்தனை முகாமுக்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமை தாங்குவார்.  இந்த முகாமில் 2022 அக்டோபர் 28 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் உரையாற்றுவார். 

இந்த இரண்டு நாள் சிந்தனை முகாமில் பங்கேற்க அனைத்து மாநிலங்களின் உள்துறை அமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள், நிர்வாகிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.  மேலும், மாநில உள்துறைச் செயலாளர்கள், காவல்துறை தலைமை இயக்குநர்கள், மத்திய ஆயுதக் காவல்படைகளின் தலைமை இயக்குநர்கள், மத்திய காவல் அமைப்புகளும் சிந்தனை முகாமில் பங்கேற்பார்கள். 

2047 தொலைநோக்குப் பார்வை, பிரதமர் திரு நரேந்திர மோடியின் சுதந்திர தின உரையில் அறிவித்த 5 உறுதிமொழிகள் ஆகியவற்றை அமலாக்குவதற்கான செயல் திட்டத்தை தயாரிப்பது இந்த இரண்டு நாள் சிந்தனை முகாமின் நோக்கமாகும்.  கணினி குற்ற நிர்வாகத்திற்கான நடைமுறை, காவல்படைகளின் நவீனமாக்குதல், குற்றவியல் நீதி முறையில்  தகவல் தொழில்நுட்ப பயன்பாட்டை அதிகரித்தல், தரைவழி எல்லை நிர்வாகம், கடலோரப் பாதுகாப்பு, இதர உள்நாட்டு பாதுகாப்பு விஷயங்கள்  இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும்.  2047-க்குள் வளர்ச்சி அடைந்த இந்தியா இலக்கை எட்டுவதற்கு  மகளிர் சக்தியின் பங்கு முக்கியமானதாகும்.  பெண்களின் பாதுகாப்புக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படும்.  அவர்களுக்கு பாதுகாப்புச்சூழல் உருவாக்கப்படும்.  மேற்குறிப்பிட்ட விஷயங்களில் சிறந்த திட்டமிடல் மற்றும் ஒத்துழைப்புக்கு  தேவையான தேசியக் கொள்கையை உருவாக்குவதும் இந்த மாநாட்டின் நோக்கமாகும்.  ஆறு அமர்வுகளில் பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள் இடம்பெறும். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1870920

**************



(Release ID: 1870957) Visitor Counter : 156