பிரதமர் அலுவலகம்
மத்தியப்பிரதேசம் ரேவாவில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்
பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு அறிவிப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
22 OCT 2022 11:26AM by PIB Chennai
மத்தியப் பிரதேச மாநிலம் ரேவாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தோர் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி வேதனை தெரிவித்துள்ளார். பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து இறந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் எனவும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார். மாநில அரசின் மேற்பார்வையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளாட்சி நிர்வாகம் அனைத்து உதவிகளையும் செய்து வருவதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட டுவிட்டர் பதிவு வருமாறு;
“மத்தியப் பிரதேச மாநிலம் ரேவாவில் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்து இதயத்தை உலுக்குகிறது. இதில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இதன் மூலம் காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். மாநில அரசின் மேற்பார்வையில் உள்ளாட்சி நிர்வாகம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்குவதில் ஈடுபட்டுள்ளது.
“மத்தியப் பிரதேசத்தில் பேருந்து விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000-மும் வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார். ”
**************
(வெளியீட்டு அடையாள எண்: 1870210)
வருகையாளர் எண்ணிக்கை : 213
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam