பிரதமர் அலுவலகம்
தந்தேராஸ் பண்டிகை தினத்தை முன்னிட்டு, மத்திய பிரதேசத்தில் பிரதமரின் வீடுவழங்கும் திட்டத்தின் (ஊரகம்) 4.5 லட்சத்திற்கும்அதிகமான பயனாளிகளின் ‘கிரகப் பிரவேசம்’ நிகழ்வில் அக்டோபர் 22 ஆம் தேதி பிரதமர் பங்கேற்கிறார்
மத்திய பிரதேசத்தில் இந்த திட்டத்தின் கீழ் ரூ. 35000 கோடியில் ஏறக்குறைய 29 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன
प्रविष्टि तिथि:
19 OCT 2022 5:53PM by PIB Chennai
தந்தேராஸ் பண்டிகை தினத்தை முன்னிட்டு, மத்திய பிரதேசத்தில் பிரதமரின் வீடுவழங்கும் திட்டத்தின் (ஊரகம்) 4.5 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளின் கிரகப் பிரவேச நிகழ்வு அக்டோபர் 22 ஆம் தேதி மத்திய பிரதேசம் சத்னாவில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் பிரதமர் காணொலி காட்சி மூலம் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளார்.
நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அனைத்து அடிப்படை வசதிகளுடன் ஒரு சொந்த வீடு வழங்குவது என்பது பிரதமரின் தொடர் முயற்சியாகும். பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் மத்திய பிரதேசத்தில் இதுவரை சுமார் 38 லட்சம் வீடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, ரூ. 35000 கோடி செலவில் 29 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
**************
(रिलीज़ आईडी: 1869289)
आगंतुक पटल : 226
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam