குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
மறுவகைப்படுத்துதலுக்கு முன் இருந்த எம்எஸ்எம்இ நிறுவனங்களின் வகைமைக்கு வழங்கப்பட்ட வரி அல்லாத அனைத்து பயன்களையும் மூன்றாண்டுகளுக்கு நீடிப்பதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது
Posted On:
19 OCT 2022 11:24AM by PIB Chennai
மறுவகைப்படுத்துதலுக்கு முன் இருந்த எம்எஸ்எம்இ நிறுவனங்களின் வகைமைக்கு வழங்கப்பட்ட வரி அல்லாத அனைத்து பயன்களையும் மூன்றாண்டுகளுக்கு நீடிப்பதற்கான அறிவிக்கை 18.10.2022 அன்று வெளியிடப்பட்டது. தொழிற்சாலையில், இயந்திரத்தில் அல்லது சாதனத்தில் அல்லது வருவாயில் அல்லது இரண்டிலும் சேர்த்து செய்யப்பட்ட முதலீட்டில் மாற்றம் இருந்தால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதியிலிருந்து 3 ஆண்டுகளுக்கு வரி அல்லாத சலுகைகள் அனைத்தும் தொடரும்.
எம்எஸ்எம்இ சம்பந்தப்பட்டவர்களுடன் உரிய பேச்சு நடத்திய பின்னரும், தற்சார்பு இந்தியா திட்ட அடிப்படையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டது. பதிவு செய்யப்பட்ட எம்எஸ்எம்இ-க்களுக்கு சலுகைகள் ஓராண்டுக்கு பதிலாக 3 ஆண்டுகளாக நீடிக்க மத்திய அரசின் எம்எஸ்எம்இ அமைச்சகம் அனுமதித்துள்ளது. அரசின் கொள்முதல் கொள்கை, தாமதமான பணப் பட்டுவாடா உள்ளிட்ட அரசின் பல்வேறு திட்டங்களின் பயன்கள் வரி அல்லாத பயன்களில் அடங்கும்.
**************
(Release ID: 1869180)
Visitor Counter : 242