பிரதமர் அலுவலகம்

பக்ரைன் நாட்டிற்கு பயணம் சென்றிருந்தபோது அவருக்கு அரசர் ஹமத் மறுமலர்ச்சி விருது வழங்கப்பட்டதை தொடர்ந்து இந்தியப் பிரதமர் ஆற்றிய ஏற்புரை

Posted On: 24 AUG 2019 3:02PM by PIB Chennai

மாட்சிமை மிகு பஹ்ரைன் நாட்டு அரசர் அவர்களே,

அரசர் ஹமத் பெயரால் அமைந்த மறுமலர்ச்சி விருது பெற்றதை நான் மிகவும் பெருமையாகவும், அதிர்ஷ்டமாகவும் உணர்கிறேன்.

130 கோடி இந்தியர்கள் சார்பாக இந்த கௌரவத்தை நான் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன். இது ஒட்டுமொத்த இந்தியாவுக்கே கிடைத்த பெருமை. இந்த உறவுகள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையவை.

21 ஆம் நூற்றாண்டில், அவை அனைத்து பகுதிகளிலும் விரிவடைகின்றன. இன்றைய கலந்துரையாடலில், புதிய ஒத்துழைப்புப் பகுதிகளைச் சேர்ப்பதற்கும், நமது உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் ஒப்புக்கொண்டது மகிழ்ச்சியான விஷயம்.

இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு வைத்துள்ளோம். இந்த முன்னேற்றத்தைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் பஹ்ரைன் இந்தியாவுடன் மேலும் நெருக்கமான கூட்டாளியாக இருக்க விரும்புகிறோம்.

இந்திய வம்சாவளியினர் பஹ்ரைனில் உள்ள மிகப்பெரிய வெளிநாட்டு சமூகம் என்பதைக் குறிப்பிடுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவர்கள் இங்கே திறந்த மனதுடன் வரவேற்கப்படுகிறார்கள்.

எங்களுக்கு அருகாமையில் இருக்கும் இந்த நெருங்கிய நண்பரை சந்திக்கும் முதல் இந்தியப் பிரதமர் என்பது குறித்து நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன்.

 

எனது பிரதிநிதிகளுக்கும் எனக்கும் தாராளமாக விருந்தோம்பல் வழங்கிய பஹ்ரைனின் தலைமைக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

இந்தியாவில் அவரது மாட்சிமையைப் பெறுவது எனக்கு ஒரு மரியாதையாக இருக்கும்.

மிக்க நன்றி

**************

(Release ID: 1867731)



(Release ID: 1868859) Visitor Counter : 85