சுற்றுலா அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சுற்றுலா காவல் திட்டம் குறித்த தேசிய மாநாட்டில் மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா அக்டோபர் 19 அன்று உரையாற்ற உள்ளார்

Posted On: 18 OCT 2022 11:07AM by PIB Chennai

மத்திய உள்துறை அமைச்சகம் காவல் துறை  ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவுடன்  இணைந்து சுற்றுலா அமைச்சகம், ஒரே சீராக சுற்றுலா காவல் திட்டத்தை அமலாக்க புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் 2022, அக்டோபர் 19 அன்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல் துறை தலைமை இயக்குநர்கள் / இன்ஸ்பெக்டர் ஜெனரல்களின்  தேசிய மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த மாநாட்டில்  மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா, தலைமை விருந்தினராக பங்கேற்பார்.  மத்திய சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி இந்த மாநாட்டில் கலந்துகொள்வார். 

எந்தவொரு சுற்றுலாப் பயணிக்கும் பாதுகாப்பும், பந்தோபஸ்தும் முன்னுரிமையாகவும், அத்தியாவசியமானதாகவும் இருக்கும் நிலையில் சுற்றுலாத் தலங்களிலும் அவற்றைச் சுற்றிலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு  பாதுகாப்பான சூழலை உருவாக்குவதற்காக பொருத்தமான பயிற்சி, பொறுப்புணர்வு ஆகியவற்றை உருவாக்குவதற்கு சுற்றுலாப் பயணிகளை மையப்படுத்திய காவல் முறையை அகில இந்திய அளவில் மேம்படுத்துவதும்  ஒரே சீரான சுற்றுலா  காவல் திட்டத்தை செயல்படுத்துவதும் இந்த மாநாட்டின் நோக்கமாகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தேவைப்படும் கவனிப்பு மற்றும் அவர்களின் பாதுகாப்பு, பந்தோபஸ்துக்கு பணியாற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இதற்காகவே  காவல் துறை  ஊழியர்களை  உருவாக்குவது  இந்த  மாநாட்டின் நோக்கமாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1868708

**************

 


(Release ID: 1868780) Visitor Counter : 166