பிரதமர் அலுவலகம்
கிளாஸ்கோ-வில் நடைபெற்ற பருவநிலை மாற்றம் தொடர்பான 26-வது மாநாட்டில் “செயல்பாடு மற்றும் ஒற்றுமை – முக்கியத்துவம் வாய்ந்த 10 ஆண்டுகள்” என்ற நிகழ்வில் பிரதமரின் உரை
Posted On:
01 NOV 2021 1:36PM by PIB Chennai
தலைவர்களே,
பருவநிலையை எதிர்கொள்ளும் வகையில் செயல்பாடுகளை மாற்றிக் கொள்வதற்கான முக்கியத்துவம் வாய்ந்த விவகாரத்தில் எனது கருத்துக்களை தெரிவிப்பதற்கு வாய்ப்பு அளித்த எனது நண்பர் போரிஸ் அவர்களுக்கு நன்றி.
செயல்பாடுகளை மாற்றிக் கொள்வது என்பதற்கு, கட்டுப்படுத்திக் கொள்வது என்ற சர்வதேச பருவநிலை விவாதத்தில் போதிய முக்கியத்துவம் கிடைக்கவில்லை. இது, பருவநிலை மாற்றத்தால் பெரும்பாலும் பாதிக்கப்படும் வளரும் நாடுகளுக்கு இழைக்கப்படும் அநீதியாக உள்ளது.
இந்தியா உள்ளிட்ட வேகமாக வளரும் நாடுகளில் விவசாயிகளுக்கு மிகப்பெரும் சவாலாக பருவநிலை திகழ்கிறது. காலம் மாறிய மழை மற்றும் வெள்ளப்பெருக்குகள் அல்லது அடிக்கடி தாக்கும் சூறாவளி ஆகியவற்றால் பயிர்கள் அழிந்துவிடுகின்றன, பயிரிடும் முறை மாறிவருகிறது.
தலைவர்களே,
இந்த விவகாரத்தில் நான் மூன்று விதமான கருத்துக்களைக் கொண்டிருக்கிறேன். முதலாவதாக, நமது வளர்ச்சிக் கொள்கைகள் மற்றும் திட்டங்களில் முக்கிய அம்சமாக செயல்பாடுகளில் மாற்றத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். அனைவருக்கும் குழாய்வழி குடிநீர், தூய்மை இந்தியா இயக்கம், இந்தியாவில் அனைவருக்கும் தூய்மையான சமையல் எரிவாயு போன்ற திட்டங்கள் மூலம், செயல்பாடுகளை மாற்றிக் கொண்டதற்கான பலன்களை தேவைப்படும் குடிமக்களுக்கு வழங்குவதோடு, அவர்களது வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தி வருகிறோம். இரண்டாவது, பல்வேறு பாரம்பரிய சமூகத்தினர், இயற்கையுடன் இணைந்து வாழ்வது குறித்து போதிய அறிவுப்புலமையை பெற்றுள்ளனர்.
மூன்றாவதாக, செயல்பாடுகளில் மாற்றத்துக்கான முறைகள் உள்ளூர் அளவிலானதாக இருக்கலாம். எனினும், பின்தங்கிய நாடுகளுக்கு சர்வதேச ஆதரவு தேவைப்படுகிறது.
உள்ளூர் அளவில் செயல்பாடுகளை மாற்றிக் கொள்வதற்கான சர்வதேச ஆதரவு என்ற யோசனையுடன், பேரிடரை எதிர்கொள்வதற்கான கட்டமைப்புக்கான கூட்டமைப்பு என்ற முயற்சியை இந்தியா எடுத்துள்ளது. இந்த முயற்சியில் அனைத்து நாடுகளும் இணைந்துகொள்ள வேண்டும் என்று நான் வேண்டிக் கொள்கிறேன்.
அனைவருக்கும் நன்றி.
**************
(Release ID:1867676)
(Release ID: 1868431)