பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குஜராத்தின் மோதேராவில் உள்ள மோதேஸ்வரி மாதா கோயிலில் பிரதமர் தரிசனம் மற்றும் பூஜை செய்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 09 OCT 2022 6:55PM by PIB Chennai

குஜராத்தின் மோதேராவில் உள்ள மோதேஸ்வரி மாதா கோவிலுக்கு இன்று சென்றிருந்த பிரதமர் திரு நரேந்திர மோடி அங்கு  தரிசனம் மற்றும் பூஜை செய்தார். பிரதமர் வருகையையொட்டி அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. கருவறையில் அமைந்த மோதேஸ்வரி மாதா சிலைக்கு முன், கைகளைக்  கூப்பி, தலை வணங்கிய மோடி, கடவுளிடம் ஆசி பெற்றார்.

பிரதமருடன் குஜராத் முதலமைச்சர் திரு  பூபேந்திர படேல், நாடாளுமன்ற உறுப்பினர் திரு சி ஆர் பாட்டீல் ஆகியோர் உடனிருந்தனர்.

முன்னதாக, குஜராத்தில் உள்ள மோதேரா, மெஹ்சானாவில் ரூ. 3900 கோடி  மதிப்பிலான பல திட்டங்களுக்குப்  பிரதமர் இன்று அடிக்கல் நாட்டினார் மற்றும் அர்ப்பணித்தார். 24x7 சூரிய சக்தியில் இயங்கும் இந்தியாவின் முதல்  கிராமமாக மோதேராவைப்  பிரதமர் அறிவித்தார்.

******


(வெளியீட்டு அடையாள எண்: 1866305) வருகையாளர் எண்ணிக்கை : 191