சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கற்பனையும் உண்மைகளும்


நிமோனியா தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் பொய்யானவை திரிக்கப்பட்டவை

Posted On: 08 OCT 2022 11:18AM by PIB Chennai

நாடு முழுவதும் நிமோனியா தடுப்பூசி (பிசிவி) பற்றாக்குறை  இருப்பதாக அண்மையில் தேசிய நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகி உள்ளது. மகாராஷ்டிராவின்  எஸ்ஐஓ உள்ளிட்ட மாநில சுகாதார அதிகாரிகளை மேற்கோள் காட்டி,  ஒரு மாதத்திற்கு மேலாக நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளுக்கு கால அட்டவணைப்படி தடுப்பூசி செலுத்துவதற்கு  இது இடையூறாக இருக்கிறது என்று செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்த செய்தி தவறானது.

 

 2022 அக்டோபர் 7 வரையிலான புள்ளி விவரங்கள் படி போதுமான பிசிவி தடுப்பூசி டோஸ்கள் இருப்பில் உள்ளன.  அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 70,18,817 (70.18 லட்சம்)  டோஸ் பிசிவி இருப்பில் உள்ளது. இது மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 3,01794 டோஸ்களையும் உள்ளடக்கியதாகும்.

 

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சுகாதார நிர்வாகத்  தகவல் முறை புள்ளிவிவரத்தின்படி 2022 ஜனவரி முதல் 2022 செப்டம்பர் வரையிலான காலத்தில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசால் வழங்கப்பட்டதில்  மொத்தம் 3, 27, 67 ,028 (3.27 கோடி)  டோஸ் பிசிவி பயன்படுத்தப்பட்டுள்ளது.  இது மகாராஷ்டிரா மாநிலத்தில் பயன்படுத்தப்பட்ட 18, 80, 722  பிசிவி  டோஸ்களையும் உள்ளடக்கியதாகும்.

 

2023 ஆம் ஆண்டுக்கு மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் பிசிவி கொள்முதலும் விநியோகமும்  தொடங்கியுள்ளது. 

 

குழந்தைகள் இறப்பு விகிதத்திற்குப்  பெரும் காரணங்களில் ஒன்றாக  நிமோனியா உள்ளது.  எனவே இந்த பிரச்சினையை தீவிரமாக எதிர்கொள்ள மத்திய அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.  நிமோனியா தடுப்பூசி 2017ல்  மத்திய அரசால்  அறிமுகம் செய்யப்பட்டது.  மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட பீகார் இமாச்சலப்பிரதேசம், மத்தியப்  பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில் படிப்படியாக செயல்படுத்தப்பட்டது.  பின்னர் அனைவருக்கும் தடுப்பூசி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பிசிவி தடுப்பூசி விரிவுபடுத்தப்பட்டது.  தற்போது  இந்தியாவில் அனைவருக்கும் தடுப்பூசி திட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக பிசிவிஉள்ளது.  27.1 மில்லியன் குழந்தைகளுக்கு பிறந்தவுடன் இது இலவசமாக அளிக்கப்படுகிறது.

 

இது மூன்று தவணைகளில் சேர்க்கப்படுகிறது. (6வது வாரத்தில் 14வது வாரத்தில் பிறகு 9 முதல் 12 மாதங்களுக்குள் பூஸ்டராக)

 

********


(Release ID: 1866027) Visitor Counter : 397