சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
தேசிய சுகாதார கணக்குகள் (என்ஹெச்ஏ) மதிப்பீடுகளில் தவறுகள் இருப்பதாக வெளிவந்துள்ள செய்தி முற்றிலும் தவறானது மற்றும் உண்மைக்கு புறம்பானது
प्रविष्टि तिथि:
07 OCT 2022 1:47PM by PIB Chennai
தேசிய சுகாதார கணக்குகள் (என்ஹெச்ஏ) மதிப்பீடுகளில் தவறுகள் இருப்பதாக வெளிவந்துள்ள செய்தி, குறிப்பாக மக்களின் மொத்த செலவினக் குறைப்பு என்பது தவறானது மற்றும் உண்மையற்றது.
தேசிய சுகாதார கணக்குகள் (என்ஹெச்ஏ) அமைப்பு, நாட்டின் சுகாதாரத் துறையில் செய்யப்படும் செலவுகளைப் பற்றிய விரிவான தகவல்களை வழங்குகிறது.
இந்த மதிப்பீடுகள் முக்கியமானவை. ஏனெனில் அவை நாட்டின் தற்போதைய சுகாதார அமைப்பின் பிரதிபலிப்பு மட்டுமல்ல, பல்வேறு சுகாதாரம் தொடர்பான நிதி ஆதாரங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும் அரசுக்கு உதவுகின்றன.
சமீபத்திய தேசிய சுகாதார கணக்குகள் (என்ஹெச்ஏ) மதிப்பீடுகள் (2018-19) தெரிவிப்பது, பொதுமக்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில் அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது.
ஒரு தனியார் இந்தியப் பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் சுகாதாரப் பொருளாதார வல்லுனர் ஒருவரால் "கானல் நீர்" என்று அடைமொழியொடு அழைக்கப்படும் குற்றச்சாற்று முற்றிலும் அடிப்படை ஆதாரம் மற்றும் முகாந்திரம் இல்லாதது ஆகும்.
தேசிய புள்ளியியல் அமைப்பின் (என்எஸ்ஓ)யின் 2017-18ஆம் ஆண்டு தகவல்களைக் கொண்டே இந்த குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதன் புள்ளிவிவரங்கள் கடந்த 2014-ஆம் ஆண்டு அடிப்படையில் அமையப்பெற்றுள்ளது. 71வது மற்றும் 75வது சுற்றுகளின் இரண்டு கணக்கெடுப்புகளும் ஒரே மாதிரி வடிவமைப்பைப் பயன்படுத்தியுள்ளது.
மேலும் 2017-18 தகவல்கள் ஒரு வருடகாலமாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு ஆகும். அதே வேளையில் 2014 தகவல்கள் ஆறு மாத காலத்திற்குள் எடுக்கப்பட்டதாகும். காலநிலை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதால், 2017-18 கணக்கெடுப்பு நிச்சயமாக முந்தைய கணக்கெடுப்பை விட வலுவானதாக இருந்தது. மேலும், அதே நிபுணர்கள் 2014 ஆம் ஆண்டின் தகவல்களை சந்தேகத்திற்கு இடமின்றி ஏற்றுக்கொண்டாலும், 2017-18 தகவல்களை "சந்தேகத்திற்குரியது" என்று அவர்களின் மதிப்பீடு உண்மையிலேயே தன்னிச்சையானது.
இத்தகைய விமர்சனம், அவர்களின் சந்தேகத்திற்குரிய வாதத்தை முன்னெடுப்பதற்கு, தவறான இணைப்பு மற்றும் தகவல்களைத் தேர்ந்தெடுத்திருப்பது தெளிவாகத் தெரிகின்றது .
என்எஸ்எஸ் தகவலின் படி, கடந்த 15 நாட்களில் பொது மக்கள் அரசு மருத்துவ சேவை வசதிகளை பயன்படுத்தியது கிட்டத்தட்ட 5% அதிகரித்துள்ளது.
பொது மக்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருப்பது கிராமப்புறங்களில் 4% மற்றும் நகர்ப்புறங்களில் 3% ஆக அதிகரித்துள்ளது.
மேலும், அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் சராசரி மருத்துவச் செலவில் 20 சதவீதத்திற்கும் அதிகமான குறைக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாற்று, உண்மைகள் மற்றும் நியாயமான காரணங்களைப் புறக்கணித்து மற்றவர்களுக்கு நியாயப்படுத்துவதற்கான ஒரு பொதுவான உதாரணம் என்பது தெள்ளத்தெளிவாகின்றது.
அரசின் சுகாதாரத்துறை சார்ந்த செலவு அதிகரிப்பதில் உள்ள விமர்சனங்களில் ஒன்று மூலதனச் செலவினத்தைச் சேர்ப்பது. தற்போதைய காதாரத்துறை சார்ந்த செலவை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு பங்காகப் பார்த்தாலும், 2013-14 ல் இருந்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
**************
GS/SM
(रिलीज़ आईडी: 1865844)
आगंतुक पटल : 299