பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மேற்கு வங்கத்தில் ஜல்பைகுரியில் நடந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

Posted On: 06 OCT 2022 9:17AM by PIB Chennai

மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரியில் துர்கா பூஜை கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்  தெரிவித்திருப்பதாவது;

"மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரியில் துர்கா பூஜை கொண்டாட்டத்தின் போது நடந்த விபத்து குறித்து வேதனை அடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கல்: பிரதமர் @narendramodi"

 "மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரியில் நடந்த துர்கா பூஜை விழாவின் போது நடந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் பொது நிவாரண நிதியிலிருந்து
ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000-ம் வழங்கப்படும்: பிரதமர் @narendramodi"

****


(Release ID: 1865503) Visitor Counter : 162