பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர், உக்ரைன் அதிபர் இடையே தொலைபேசி உரையாடல்

Posted On: 04 OCT 2022 6:49PM by PIB Chennai

இமாச்சலப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பதிலளித்தார். இந்தத் திட்டங்களைத் தொடங்கி  வைக்கவும், அடிக்கல் நாட்டவும், இமாச்சலப் பிரதேசத்திற்கு பிரதமர் பயணிக்கிறார்.

பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்டு, இன்று திறக்கப்படவுள்ள பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த ட்விட்டர் பதிவு ஒன்றுக்கு, “இந்தியா முழுவதும் இந்த நிலைதான் உள்ளது. 2 மற்றும் 3-ஆம் தர நகரங்கள், சிறு நகரங்கள், முன்னேற விரும்பும் மாவட்டங்கள் முதலியவை வளர்ச்சியடைவதற்காக, இவை கவனத்தில் கொள்ளப்படுகின்றன”, என்று பிரதமர் பதிலளித்தார்.

எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த மற்றொரு கருத்துக்கு பதிலளித்த பிரதமர் திரு மோடி, “உங்கள் கூற்று சரிதான். கூடுதல் மருத்துவ கல்லூரிகள், பிராந்திய மொழிகளில் கல்வி முதலியவையும் எங்கள் முயற்சிகளில் அடங்கும். வளர்ந்து வரும் மருத்துவர்களின் வெற்றி, இது”, என்று தெரிவித்தார்.

தேசிய நெடுஞ்சாலை 105 இல் ரூ. 1690 கோடி மதிப்பில் பிஞ்சூரில் இருந்து நலகர் வரை நான்கு வழி பாதை அமைப்பதற்கான 31 கிலோமீட்டர் தூர திட்டம் பற்றி ஒருவர் கருத்து தெரிவித்திருந்ததற்கு, “சரியாக சுட்டிக் காட்டினீர்கள்”, என்று பிரதமர் பதிலளித்தார்.

•••••••••


(Release ID: 1865312) Visitor Counter : 179