நிதி அமைச்சகம்
2022 செப்டம்பர் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வருவாய் வசூல் ரூ. 1,47,686 கோடி
Posted On:
01 OCT 2022 12:59PM by PIB Chennai
2022 செப்டம்பர் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1,47,686 கோடி, இதில் சிஜிஎஸ்டி ரூ. 25,271 கோடி, எஸ்ஜிஎஸ்டி ரூ. 31,813 கோடி, ஐஜிஎஸ்டி ரூ 80,464 கோடி (சரக்குகளின் இறக்குமதி மூலம் வசூலிக்கப்பட்ட ரூ. 41,215 கோடி உள்பட ). செஸ் வசூல் ரூ 10,137 கோடி (பொருட்களின் இறக்குமதி மூலம் வசூலிக்கப்பட்ட ரூ 856 கோடி உட்பட).
ஐஜிஎஸ்டி-யிலிருந்து சிஜிஎஸ்டி-க்கு ரூ.31,880 கோடியும், எஸ்ஜிஎஸ்டி-க்கு ரூ.27,403 கோடியும் வழக்கமான முறையில் அரசாங்கம் வழங்கியுள்ளது. செப்டம்பர் 2022 இல் வழக்கமான செட்டில்மென்டுக்குப் பிறகு மத்திய மற்றும் மாநிலங்களின் மொத்த வருவாய் சிஜிஎஸ்டி- க்கு ரூ.57,151 கோடியும், எஸ்ஜிஎஸ்டி- க்கு ரூ.59,216 கோடியும் ஆகும்.
2022 செப்டம்பர் மாதத்திற்கான வருவாய் கடந்த ஆண்டு இதே மாதத்தில் கிடைத்த ஜிஎஸ்டி வருவாயை விட 26% அதிகமாகும். இந்த மாதத்தில், சரக்குகளின் இறக்குமதியின் வருவாய் 39% அதிகமாக இருந்தது. உள்நாட்டு பரிவர்த்தனையின் (சேவைகளின் இறக்குமதி உட்பட) வருவாய் கடந்த ஆண்டு இதே மாதத்தில் இந்த ஆதாரங்களில் இருந்து கிடைத்த வருவாயை விட 22% அதிகமாகும்.
எட்டாவது மாதமாகவும், தொடர்ந்து ஏழாவது மாதமாகவும், மாதாந்திர ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1.4 லட்சம் கோடிக்கும் அதிகமாக வசூலாகியுள்ளது.
தமிழகத்திலிருந்து செப்டம்பர் மாதத்தில் ரூ.8637 கோடியாகும். இது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தைவிட 10% அதிகமாகும். இதேபோல, புதுச்சேரியிலிருந்து ரூ.188 கோடி வசூலாகியுள்ளது. இது கடந்த ஆண்டு இதே மாதத்தை விட 18% அதிகம் ஆகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1864082
*******
(Release ID: 1864149)
Visitor Counter : 236