உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சர்வதேச சூரிய சக்தி கூட்டணி மற்றும் சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்புக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

Posted On: 28 SEP 2022 9:00AM by PIB Chennai

2022 செப்டம்பர் 26 அன்று மான்ட்ரீலில் நடைபெற்ற சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து  அமைப்பின் 42-வது அமர்வுக்கு இடையேயான நிகழ்வில் சர்வதேச சூரிய சக்தி கூட்டணி மற்றும் அமைப்புக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.  இந்த நிகழ்வுக்கு இந்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம் சிந்தியா, பிரான்ஸ் நாட்டின் போக்குவரத்து அமைச்சர் திரு மான்சியூர் கிளமண்ட்  பியூனே, சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து  அமைப்பின் தலைவர்  திரு  சல்வடோர் சியாச்சிடானோ  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இந்த ஒப்பந்தத்தில் சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து  அமைப்பின் தலைமைச் செயலாளர் திரு ஜூவான் கார்லோஸ் சலாசரும் சர்வதேச சூரிய சக்தி கூட்டணியின் தலைமை நிர்வாகி திரு ஜோஷுவா விக்லிஃப்பும் கையெழுத்திட்டனர்.

 2022 மே மாதத்தில்  மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய  எம் சிந்தியா மேற்கொண்ட பயணத்தின் போது இந்த ஒப்பந்தம் குறித்த கருத்தை சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து  அமைப்பின் தலைவருடனான சந்திப்பின் போது தெரிவித்தார். இந்த கருத்து ஏற்கப்பட்டு இப்போது புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

சர்வதேச சூரியசக்தி கூட்டணியில் 121 நாடுகளும், பல ஐநா அமைப்புகள் உட்பட 32 பங்குதாரர் அமைப்புகளும் இடம்பெற்றுள்ளன. படிம எரிபொருளை சார்ந்திருப்பதை குறைப்பதற்கு சூரிய சக்தியை திறமையான முறையில் பயன்படுத்துவது இந்த கூட்டணியின் நோக்கமாகும். புதுபிக்கவல்ல எரிசக்தி பயன்பாட்டுக்கு குறைந்த செலவில் எளிதில் மாற்றத்தக்கதாக உள்ள சாதனங்களை உறுப்பு நாடுகளுக்கு வழங்க  இந்த கூட்டணி பாடுபட்டு வருகிறது.

 மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1862753

**************


(Release ID: 1862826) Visitor Counter : 303