வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
‘மேக் இன் இந்தியா’ திட்டம் தொடங்கப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவடையும் வேளையில், வருடாந்திர அன்னிய நேரடி முதலீடு 83 பில்லியன் டாலராக இரட்டிப்பு அடைந்துள்ளது
Posted On:
24 SEP 2022 4:11PM by PIB Chennai
மத்திய அரசின் முதன்மைத் திட்டமான ‘மேக் இன் இந்தியா’ தொடங்கப்பட்டு, 2022, செப்டம்பர் 25-ஆம் தேதியில் தனது 8 ஆண்டுகால சீர்திருத்த நடவடிக்கைகளை நிறைவு செய்கிறது
முதலீட்டை எளிதாக்குதல், புத்தாக்க நடவடிக்கைகளை ஊக்குவித்தல், அறிவுத்திறனை மேம்படுத்துதல் மற்றும் சிறந்த உற்பத்தி உள்கட்டமைப்பை உருவாக்கல் போன்ற நோக்கங்களைக் கொண்டது ‘மேக் இன் இந்தியா’ திட்டமாகும்.
இந்திய அரசின் முதன்மைத் திட்டமான மேக் இன் இந்தியா, 25 செப்டம்பர் 2022 அன்று 8 ஆண்டுகால சீர்திருத்தங்களை நிறைவு செய்கிறது.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் சிறந்த தலைமையின் கீழ் 2014 –ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘மேக் இன் இந்தியா’ திட்டம், நமது நாட்டை உலகளாவிய அளவில்
ஒரு முன்னணி உற்பத்தி மற்றும் முதலீட்டு இடமாக உருவாக்கி இருக்கின்றது.
'புதிய இந்தியா'வின் வளர்ச்சிப் பாதையில் பங்கேற்க உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள் மற்றும் நம்மோடு இணைந்து செயல்படுபவர்களுக்கு ஒரு திறந்த அழைப்பாகும். இந்த திட்டம் 27 துறைகளில் அதிக அளவில் சாதனைகளை செய்துள்ளது. இதில் உற்பத்தி மற்றும் சேவைத்துறைகளும் அடங்கும்.
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, இந்திய அரசு ஒரு தாராளமயமான மற்றும் வெளிப்படையான கொள்கையை வகுத்துள்ளது. இதன் விளைவாக பெரும்பாலான துறைகள் அந்நிய நேரடி முதலீட்டை தங்கு தடையின்றி பெறமுடியும்.
இந்தியாவில் 2014-2015 ஆம் ஆண்டில் 45.15 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த அந்நிய நேரடி முதலீடுகள், எட்டு ஆண்டுகளாக தொடர்ந்து சாதனை படைத்து 2021-2022 ஆம் ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான அந்நிய நேரடி முதலீடு 83.6 பில்லியன் டாலர்கள் மதிப்பில் கிடைத்துள்ளது.
இந்த அந்நிய நேரடி முதலீடு சுமார் 101 நாடுகளில் இருந்து வந்துள்ளது. 31 யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்கள் மற்றும் 57 துறைகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
சமீப ஆண்டுகளில் பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் எளிதாக வணிகம் செய்வது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மூலம், நடப்பு நிதியாண்டில் 100 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் அந்நிய நேரடி முதலீட்டை ஈர்க்கும் பாதையில் இந்தியா உள்ளது.
’மேக் இன் இந்தியா’ திட்டத்தை வலுப்படுத்த, இந்திய அரசால் பல சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மேலும், முதலீட்டாளர்களுக்கு ஒப்புதல்கள் மற்றும் அனுமதிகளுக்காக ஒற்றை டிஜிட்டல் தளத்தை வழங்கி அதன் மூலம் வணிகத்தை எளிதாக்குவதை மேம்படுத்த தேசிய ஒற்றைச் சாளர அமைப்பு (NSWS) செப்டம்பர் 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த வலைத்தளத்தை முதலீட்டாளர் பயன்படுத்தும் போது ஏற்படும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக இந்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு அமைச்சகங்கள்/துறை சார்ந்த அமைப்புகளை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
'மேக் இன் இந்தியா' பார்வையின் மற்றொரு வெளிப்பாடாக, ‘ஒரு மாவட்டம்-ஒரு தயாரிப்பு (ODOP)’ என்ற முன்முயற்சி தொடக்கப்பட்டது. நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் உள்நாட்டு தயாரிப்புகளை மேம்படுத்துவதற்கும், உற்பத்தி செய்வதற்கும், கைத்தறி நெசவாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு உலகளாவிய தளத்தை வழங்க இந்த முன்முயற்சி பெரும் பங்காற்றி வருகின்றது.
இதன் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளின் சமூக-பொருளாதார வளர்ச்சி மேன்மை அடைந்து வருகின்றது.
இந்தியாவில் வணிகம் செய்யும் முதலீட்டாளர்களுக்கு, தேசத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு பங்களிக்கும் வகையில், தேசத்தில் உள்ள வணிகச் சூழல் அமைப்பு சாதகமாக இருப்பதை உறுதிசெய்ய, மேக் இன் இந்தியா திட்டம் முயற்சி செய்து வருகிறது.
இது பலவிதமான சீர்திருத்தங்கள் மூலம் முதலீடு வரத்து அதிகரிப்பதற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுத்தது.
’மேட் இன் இந்தியா' தயாரிப்புகள் உலகளாவிய தரங்களுக்கு இணையாக இருக்க வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1861929
***************
(Release ID: 1861937)
Visitor Counter : 5066