தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

இந்திய தொலைத்தொடர்பு மசோதா 2022 வரைவு பற்றிய கருத்துகளை கேட்கிறது

Posted On: 22 SEP 2022 11:16AM by PIB Chennai

தொலைத்தொடர்புத் துறையில் நவீன மற்றும் எதிர்காலத்துக்குத் தேவையான சட்டங்களை உருவாக்க, இந்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் பொது ஆலோசனை செயல்முறையை தொடங்கியுள்ளது.

'இந்தியாவில் தொலைத்தொடர்புகளை நிர்வகிக்கும் புதிய சட்டக் கட்டமைப்புகளுக்கான தேவை' வெளியிடப்பட்டு பொதுமக்களிடம் இருந்து ஆலோசனைகள் வரவேற்கப்பட்டன. தொழிற்சங்கம் உள்ளிட்ட பல்வேறு பங்கேற்பாளர்களிடமிருந்து ஆலோசனைகள் பெறப்பட்டன.

இந்த ஆலோசனைகளின் அடிப்படையில் அமைச்சகம் தற்போது, இந்திய தொலைத்தொடர்பு மசோதா 2022 வரைவை தயாரித்துள்ளது.

ஆலோசனைகளை எளிதாக்க, மசோதாவின் சுருக்கமான கண்ணோட்டத்தை தெரிவிக்கும் விளக்கக் குறிப்பும் தயாரிக்கப்பட்டுள்ளது.

வரைவு மசோதா மற்றும் விளக்கக் குறிப்பை https://dot.gov.in/relatedlinks/indian-telecommunication-bill-2022.    மசோதா என்ற இணையதளத்தில் காணலாம். கருத்துகளை naveen[dot]kumar71[at]gov[dot]in என்ற மின்னஞ்சல் முகவரியில் அனுப்பலாம். கருத்துகளை அனுப்ப 2022 அக்டோபர் 20 கடைசி நாளாகும்.

                                                     **************

Release ID: 1861399

 



(Release ID: 1861468) Visitor Counter : 379