சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்சிமையங்கள் தொடர்பான விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது குறித்த அறிவிக்கை
Posted On:
21 SEP 2022 3:16PM by PIB Chennai
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் செப்டம்பர் 20-ந் தேதியிட்ட அறிவிக்கையின்படி, அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையங்கள் தொடர்பான விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
பரிந்துரைக்கப்பட்ட விதிகளை நடைமுறைப்படுத்தும்போது, இந்த அமைச்சகம் மற்றும் சம்பந்தப்பட்ட பிரிவினரால் சில விஷயங்கள் அடையாளம் காணப்பட்டன.
புதிய விதிகள் பின்வரும் முக்கிய அம்சங்களுடன் ஓட்டுநர் பயிற்சி மையங்களின் செயல்பாட்டை மேலும் நெறிப்படுத்தும் -
- அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்சி மையங்களின் அங்கீகாரத்தைப் புதுப்பித்தல் ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.
- இரு சக்கர வாகனங்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான பாடத்திட்டம், நடைமுறை அறிவை முழுமையாக உள்ளடக்கியதாகும்.
- ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கான திறன் தேர்வு சான்றிதழைப் பெறுவதற்கு பயிற்சி பெறுபவர் "ஓட்டுவதற்கான திறனுக்கான தேர்வில்" தேர்ச்சி பெற வேண்டும்.
- அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்சி மையங்களுடன் இணைக்கப்பட்ட பிற விதிகள், கட்டணம், ஓட்டுநர் உரிமம் வழங்குதல் போன்றவை தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.
Click here for the gazette notification
**************
(Release ID: 1861250)
Visitor Counter : 149