சுற்றுலா அமைச்சகம்

இமாசலப்பிரதேசம், தரம்சாலாவில் நடைபெற்று வரும் மாநில சுற்றுலாத்துறை அமைச்சர்கள் பங்கேற்றுள்ள தேசிய மாநாட்டின் 2-ம் நாள் நிகழ்ச்சியை திரு ஜெய்ராம் தாக்கூர், திரு கிஷன் ரெட்டி தொடங்கி வைத்தனர்

Posted On: 19 SEP 2022 2:02PM by PIB Chennai

இமாசலப்பிரதேசம், தரம்சாலாவில் நடைபெற்று வரும் மாநில சுற்றுலாத்துறை அமைச்சர்கள் பங்கேற்றுள்ள தேசிய  மாநாட்டின் 2-ம் நாள் நிகழ்ச்சி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்புடன் தொடங்கியது. இதனை இமாச்சலப்பிரதேச முதலமைச்சர் திரு ஜெய்ராம் தாக்கூர், மத்திய சுற்றுலா, கலாச்சாரத்துறை அமைச்சர் திரு கிஷன் ரெட்டி தொடங்கி ஆகியோர் வைத்தனர். தமிழ்நாடு, மத்தியப்பிரதேசம், அருணாசலப்பிரதேசம், அசாம், கோவா, ஹரியானா, மிசோரம், ஒடிசா, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மகாராஷ்ட்ரா, இமாச்சலப்பிரதேசம் ஆகிய 12 மாநிலங்களின் சுற்றுலாத்துறை அமைச்சர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இமாசலப்பிரதேசம் தரம்சாலாவில், மாநில சுற்றுலாத்துறை அமைச்சர்களின் 3 நாள் தேசிய மாநாடு நேற்று   திரு கிஷன் ரெட்டி தலைமையில் செய்தியாளர் சந்திப்புடன் தொடங்கியது.

அப்போது பேசிய திரு கிஷன் ரெட்டி, நோய்த் தொற்றுக்கு இடையே, சுற்றுலாத்துறை புத்துணர்ச்சி பெறுவதற்கான வகையில் உள்ளது என்று கூறினார். இந்தியா வருகை தரும் எந்தவொரு சர்வதேச சுற்றுலாப் பயணிக்கும் இடங்களை பார்ப்பதோடு மட்டுமல்லாமல், அனுபவத்திற்கான மற்றும் வாழ்க்கை மாற்றத்திற்கான இடமாக திகழ்கிறது என்று தெரிவித்தார். 5 ட்ரில்லியன் பொருளாதாரம் என்ற நோக்கத்தை இந்தியா விரைவில் அடைய வேண்டும் எனில், இதில் சுற்றுலாத்துறை மிக முக்கிய பங்கு வகிப்பதாக கூறினார்.

என்எஸ்எஸ், என்சிசி போன்று அனைத்து மட்டங்களிலும், இளைஞர் சுற்றுலா மையங்களை உருவாக்க நாம் உழைக்க வேண்டும் என்று திரு கிஷன் ரெட்டி கேட்டுக்கொண்டார். இளைஞர்களிடையே இந்த சுற்றுலா மையங்களை பிரபலப்படுத்துவதற்கான பணிகளை போர்க்கால அடிப்படையில், மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும் என்று கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1860536

**************



(Release ID: 1860573) Visitor Counter : 151