அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav g20-india-2023

அமெரிக்காவில் நடைபெற உள்ள உலக தூய்மை எரிசக்தி செயல் அமைப்பு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு திட்டத்தை உலகத்தின் முன் சமர்ப்பிக்கும் வாய்ப்பை இந்தியா பெறவிருக்கிறது என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்

Posted On: 19 SEP 2022 1:35PM by PIB Chennai

அமெரிக்காவில் நடைபெற உள்ள உலக தூய்மை எரிசக்தி செயல் அமைப்பு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு திட்டத்தை உலகத்தின் முன் சமர்ப்பிக்கும் வாய்ப்பை இந்தியா பெறவிருக்கிறது என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) புவி அறிவியல் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

அமைச்சர்கள் நிலையிலான கூட்டு உயர்நிலைக்குழுவின் தலைவராக அமெரிக்காவில் 5 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள புறப்படுவதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், இந்த அமைப்பு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 30 அமைச்சர்கள், நூற்றுக்கணக்கான தலைமை நிர்வாக அதிகாரிகள், வணிகத் தலைவர்கள், விஞ்ஞானிகள், கல்வியாளர்கள் உட்பட அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து கொண்டுவரும் என்றார். தூய்மை எரிசக்தி தொடர்பான  பிரச்சனைகளில் பிரதமர் மோடி தலைமையின் கீழ், இந்தியாவால் முன்மொழியப்பட்டதற்கு இது ஓர் அங்கீகாரமாகவும் உள்ளது என்று அவர் கூறினார்.

இந்தியாவின் 75 வது சுதந்திரத்தினத்தன்று (ஆகஸ்ட்15, 2021)  தேசிய ஹைட்ரஜன் இயக்கத்தை  பிரதமர் மோடி தொடங்கிவைத்ததாக டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். இந்த இயக்கம், அரசின் பருவ நிலை இலக்குகளை எட்டுதல், இந்தியாவை பசுமை ஹைட்ரஜன் குவி மையமாக மாற்றுதல் ஆகியவற்றுக்கு உதவி செய்வதை நோக்கமாக கொண்டது என்றும் இது 2030க்குள் 5 மில்லியன் டன் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி என்ற இலக்கை எட்ட உதவும் என்றும் அவர் கூறினார்.

உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தூய்மை எரிசக்தி தொழில்நுட்பங்களில் அண்மையில் ஏற்பட்டுள்ள சாதனைகள் பின்னணியில், உலக தூய்மை எரிசக்தி செயல் அமைப்பின் தொடக்க அமர்வு மற்றும் வட்டமேசை கூட்டங்களில் மிகவும் நெருக்கமான தொடர்புகளை தாம் எதிர்நோக்கி இருப்பதாக டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1860529

 

**************(Release ID: 1860570) Visitor Counter : 96