தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் திரு.பூபேந்தர் யாதவ், பாலியில் நடைபெற்ற தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை ஜி20 அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்
Posted On:
14 SEP 2022 3:16PM by PIB Chennai
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் திரு.பூபேந்தர் யாதவ், 2022 செப்டம்பர் 13, 14 ஆகிய தேதிகளில் இந்தோனேஷியாவின் பாலியில் நடைபெற்ற தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை ஜி20 அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் உரையாற்றிய மத்திய அமைச்சர், கொவிட் பெருந்தொற்றுக்கு பிந்தைய நாட்களில், நெகிழ்ச்சியான, சமமான மற்றும் நிலையான மீட்சியை உறுதிப்படுத்துவதற்காக வேலைவாய்ப்பு உருவாக்கம், சமூகப் பாதுகாப்பு, திறமை மற்றும் முறைப்படுத்துதல் ஆகியவை தொடர்பாக வலுவான கொள்கைகளை மேம்படுத்துவதற்காக நாடுகள் ஒன்றிணைவதன் அவசியம் குறித்துப் பேசினார்.
மாறிவரும் வேலைவாய்ப்புக்கான உலகில், முக்கியமானதாக உள்ள முன்னுரிமை பகுதிகளை தேர்ந்தெடுத்த இந்தோனேஷியாவை மத்திய அமைச்சர் பாராட்டினார். அவை மாற்றுத்திறனாளிகளின் தொழிலாளர் சந்தை ஒருங்கிணைப்பு, நிலையான வளர்ச்சி மற்றும் சமூக அடிப்படையிலான தொழில்பயிற்சியை ஊக்குவிப்பது மூலம் மனித திறன் மேம்பாட்டில் உற்பத்தித்திறன், தொழில்முனைவோரை ஊக்குவித்தல், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை வேலைவாய்ப்பை உருவாக்கும் கருவியாக மாற்றுதல் மற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் மிகவும் பயனுள்ள தொழிலாளர் பாதுகாப்பை மாற்றியமைத்தல் உள்ளிட்டவை ஆகும். இந்த அனைத்து துறைகளிலும் இந்தியாவின் முன்னுதாரண சாதனைகள் குறித்தும் மத்திய அமைச்சர் எடுத்துரைத்தார்.
ஜெர்மனி, சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, நெதர்லாந்து, துருக்கி உள்ளிட்ட நாடுகளுடன் இருதரப்பு சந்திப்புகளையும் மத்திய அமைச்சர் நடத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1859174
**************
(Release ID: 1859283)
Visitor Counter : 198