ஆயுஷ்
ஆயுர்வேத தினம் 2022-ஐ யொட்டி 6 வார நிகழ்ச்சியை அகில இந்திய ஆயுர்வேத கழகம் தொடங்கியுள்ளது
प्रविष्टि तिथि:
12 SEP 2022 6:25PM by PIB Chennai
ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள அகில இந்திய ஆயுர்வேதக் கழகம், ஆயுர்வேதம் தினம் 2022 நிகழ்ச்சியை இன்று தொடங்கியது. 12 செப்டம்பர் முதல் 23 அக்டோபர் வரையிலான ஆறு வார நிகழ்ச்சிக்கான முன்னோட்டத்தை காணொலி காட்சி வாயிலாக மத்திய ஆயுஷ் அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால், ஆயுஷ் இணை அமைச்சர் டாக்டர் முஞ்சபாரா மகேந்திரபாய் கலுபாய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தன்வந்திரி ஜெயந்தி அன்று ஆண்டுதோறும் ஆயுர்வேத தினத்தை ஆயுஷ் அமைச்சகம் கொண்டாடுகிறது. இந்த ஆண்டு 23 அக்டோபர் அன்று கொண்டாடப்பட உள்ளது. மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளுடன் இணைந்து இந்த ஆண்டு அமைச்சகம் கொண்டாடுகிறது. அதனால், பாரம்பரிய மருத்துவ முறை குறித்து நாட்டில் ஒவ்வொருவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1858756
*****
(रिलीज़ आईडी: 1858785)
आगंतुक पटल : 199