கூட்டுறவு அமைச்சகம்
புதுதில்லியில் நடைபெறும் மாநில கூட்டுறவுத்துறை அமைச்சர்களின் இரண்டு நாள் தேசிய மாநாட்டில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று உரையாற்றினார்
Posted On:
08 SEP 2022 2:37PM by PIB Chennai
புதுதில்லியில் நடைபெறும் மாநில கூட்டுறவுத்துறை அமைச்சர்களின் இரண்டு நாள் தேசிய மாநாட்டில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று உரையாற்றினார் இம்மாநாட்டில், மத்திய கூட்டுறவுத்துறை இணை அமைச்சர் திரு பி எல் வர்மா, 21 மாநிலங்களின் கூட்டுறவுத்துறை அமைச்சர்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் உரையாற்றிய மத்திய கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா, வரும் காலங்களில், கூட்டுறவுத் துறையை புதிய வடிவத்திற்கு எடுத்துச் செல்வதற்கான படிக்கட்டாக இந்த இரண்டு நாள் மாநாடு அமையும் என்று தெரிவித்தார். இந்தியாவின் கூட்டுறவு இயக்கம் 125 ஆண்டுகால பழமையானது என்று கூறிய அவர், இதற்கான நடவடிக்கைகளில், உரிய மாற்றத்தை நாம் மேற்கொள்ளாவிடில், இது காலாவதியாகிவிடும் என்று தெரிவித்தார். ஒவ்வொருவரின் தேவையின் அடிப்படையில் கூட்டுறவுத் துறையை வலுப்படுத்த வேண்டிய தருணம் இது என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை 6-ம் நாள் கூட்டுறவுத்துறை அமைச்சகத்தை பிரதமர் நரேந்திர மோடி உருவாக்கியதாக குறிப்பிட்ட திரு அமித் ஷா, ஒரு வருட காலத்திற்குள் கூட்டுறவுத்துறை தொடர்பாக பல்வேறு கூட்டங்கள் மற்றும் மாநாடுகளை இந்த அமைச்சகம் நடத்தியுள்ளதாக கூறினார்.
பொருளாதாரத்தின் வலிமையான தூணாக கூட்டுறவுத்துறையை மாற்றுவதன் மூலம், கோடிக்கணக்கான ஏழை மக்களின் வாழ்வாதாரத்தில் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவர பிரதமர் நரேந்திர மோடி விரும்பியதாக அவர் தெரிவித்தார். 5 ஆண்டுகளில் மூன்று லட்சம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்த கூட்டுறவுத்துறை அமைச்சகம் முயற்சித்து வருவதாக அவர் கூறினார். தரவு இல்லாமல் எந்தவொரு துறையிலும் வளர்ச்சி என்பது முடியாதது என்று கூறிய அவர், கூட்டுறவுத் துறைக்கு என தேசிய தரவு தளத்தை கூட்டுறவுத்துறை அமைச்சகம் உருவாக்கி வருவதாக தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1857843
**************
(Release ID: 1857872)
Visitor Counter : 139