மத்திய அமைச்சரவை

இந்தியா மற்றும் இங்கிலாந்து, வடக்கு அயர்லாந்து இடையே கல்வித்தகுதிகளை அங்கீகரிப்பது தொடர்பாக பரஸ்பரம் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 07 SEP 2022 4:08PM by PIB Chennai

இந்தியா மற்றும் இங்கிலாந்து, வடக்கு அயர்லாந்து இடையே 25.04.2022 அன்று கல்வித்தகுதிகளை அங்கீகரிப்பது தொடர்பாக பரஸ்பரம் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தங்கள் நாட்டின் ஒரு வருட முதுநிலைப் பட்டப்படிப்புக்கு அங்கீகாரம் அளிக்குமாறு இந்தியாவிடம், இங்கிலாந்து கேட்டுக் கொண்டது. பின்னர் இது குறித்து புதுதில்லியில், கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி நடைபெற்ற இருநாட்டு அமைச்சர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில், இது குறித்து பரிசீலிக்க கூட்டு நடவடிக்கைக் குழு, அமைப்பதென முடிவு செய்யப்பட்டது. இதன் முதலாவது கூட்டம் கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 4-ம் தேதி நடைபெற்றது. அப்போது இருதரப்புக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வரைவுசெய்ய ஒப்புக்கொள்ளப்பட்டது.

இந்தியா – இங்கிலாந்து இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் பொறியியல், மருத்துவம்,  செவிலியர் படிப்பு, துணை மருத்துவ படிப்பு, மருந்தியல், சட்டம், கட்டடக்கலை உள்ளிட்ட தொழில்படிப்புகளில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.  இதன் மூலம், கூட்டு அல்லது இரட்டை பட்டப்படிப்பு படிப்பதற்கான வசதிகள் ஏற்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1857427

**************



(Release ID: 1857489) Visitor Counter : 163