வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

அமெரிக்காவின் எஸ்இடியு ஸ்டார்ட்அப் நிறுவனத்தை திரு பியூஷ் கோயல் தொடங்கிவைத்தார் – சான்பிரான்சிஸ்கோவில் மாற்றத்தை ஏற்படுத்தும் தொழில் முனைவோர்களை ஆதரித்தல் மற்றும் திறன் மேம்பாட்டு திட்டம்

Posted On: 07 SEP 2022 1:24PM by PIB Chennai

சான்பிரான்சிஸ்கோவில் மாற்றத்தை ஏற்படுத்தும் தொழில் முனைவோர்களை ஆதரித்தல் மற்றும் திறன் மேம்பாட்டு திட்டமான அமெரிக்காவின் ஸ்டா்ர்ட்அப் நிறுவனத்தை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் தொடங்கிவைத்தார். இந்தியாவில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்களுடன்  அமெரிக்க முதலீட்டாளர்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தலைவர்களை  இணைக்கும் நோக்கில் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிதி அளித்தல், சந்தைப்படுத்துதல் மற்றும் வர்த்தகமயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உதவும் நோக்கிலும், இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொடங்கவும் முதலீடு செய்யவும் விரும்பும், அமெரிக்கர்களுக்கான புவிசார் தடைகளை களையும் வகையில், எஸ்இடியு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், வர்த்தக முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்களுடன் பல்வேறு கூட்டங்களில் அமைச்சர் கலந்து கொண்டு விவாதித்தார்.  இந்தியாவில் வர்த்தகம் புரிவது தொடர்பான வாய்ப்புகள் குறித்து வர்த்தக முதலீட்டாளர்களும், மற்ற முதலீட்டாளர்களும் கேட்டறிந்தனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில  செய்தி குறிப்பைக் காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1857352

-----(Release ID: 1857424) Visitor Counter : 175