சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
தேசிய நோய்த் தடுப்பு மையத்தின் 6 மாநிலங்களுக்கான கிளைகளுக்கு காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா
Posted On:
06 SEP 2022 1:51PM by PIB Chennai
ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம், கேரளா, மகாராஷ்டிரா, திரிபுரா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் தேசிய நோய்த் தடுப்பு மையத்தின் (என்சிடிசி) கிளைகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா காணொலி மூலம் இன்று அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் பேசியதாவது:
“நோய்ப் பரவலை தீவிரமாகக் கண்காணித்தால் மட்டுமே, நோயிலிருந்து தற்காத்துக்கொள்ளவும், கட்டுப்படுத்தவும் முடியும். இதற்கு தேசிய நோய்த் தடுப்பு மையத்தின் கிளைகள் முக்கிய பங்காற்றும். நோய்களைக் கண்டறிந்து விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு, உடல் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் தொடர்பான உள் கட்டமைப்பு வசதிகள் அவசியமாகிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இயங்கும் மத்திய அரசு நாடு முழுவதும் உடல் ஆரோக்கியம் தொடர்பான உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. நாட்டுமக்கள் அனைவருக்கும் தரமான மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய மருத்துவ வசதிகளை மேம்படுத்துவதில் பிரதமர் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். மத்திய அரசு பல்வேறு மாநிலங்களில் உள்ள சுகாதாரத்துறை சம்பந்தப்பட்ட உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் சுமார் 64 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்துள்ளது. தற்போதைய கொவிட் -19 பெருந்தொற்று நோய் பரவலின் தாக்கத்தை நாம் நன்கு உணர்ந்திருக்கிறோம். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள தேசிய நோய்த் தடுப்பு மையத்தின் கிளைகள் மூலம் அந்தந்த மாநில அரசுகள் பெருந்தொற்று நோய்ப் பரவலை உடனடியாக கண்டறிந்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். புதிய தொழில்நுட்பம் மூலம் தேசிய நோய்த் தடுப்பு மையத்தின் கிளைகள் அதன் தலைமையகத்தை உடனடியாக தொடர்பு கொண்டு நோய்ப் பரவலைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள முடியும். தற்போது, 8 மாநிலங்களில் தேசிய நோய்த் தடுப்பு மையமங்கள் உள்ளன.
இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தேசிய நோய்த் தடுப்பு மையத்தின் பரிசோதனைக்கூட கட்டிடத்தை திறந்து வைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1857098
**************

(Release ID: 1857136)
Visitor Counter : 222