பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிரியர் தினத்தன்று தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுடன் பிரதமர் உரையாடினார்


கல்வித்துறையில் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ஆற்றிய பணிகள் நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது

ஆசிரியராக இருந்த தற்போதைய இந்திய குடியரசுத்தலைவர் மூலம் பாராட்டப்படுவது மேலும் முக்கியத்துவம் வாய்ந்தது

ஆசிரியரின் பங்கு என்பது மனிதர்களின் வாழ்வில் வெளிச்சத்தை ஏற்படுத்தி அவர்களின் கனவுகளை நனவாக்கும் வகையில், கற்பிப்பதாகும்

மாணவர்களின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு அரசு உருவாக்கியுள்ள தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமாகும்

2047-ஆம் ஆண்டுக்கான கனவை காணாமல் நாட்டில் உள்ள எந்தவொரு மாணவரும் இருந்துவிடக் கூடாது

தண்டி யாத்திரை – வெள்ளையனே வெள்ளையேறு இயக்கம் நடைபெற்ற காலத்தில் நாட்டில் இருந்த உத்வேகத்தை மீண்டும் ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும்

Posted On: 05 SEP 2022 6:18PM by PIB Chennai

ஆசிரியர் தினத்தையொட்டி புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாடினார்.

இந்நிகழ்ச்சியின் போது, சர்வபள்ளி் ராதாகிருஷ்ணணுக்கு, பிரதமர் மரியாதை செலுத்தினார். ஆசிரியராக இருந்த தற்போதைய இந்திய குடியரசுத்தலைவர் மூலம் பாராட்டப்படுவது மேலும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவர் ஒடிசாவில் தொலைதூர இடங்களில் ஆசிரியர் பணியை மேற்கொண்டார் என்றும் நினைவூட்டினார். நாடு இன்று அமிர்தப் பெருவிழாவின் கனவுகளை நிறைவேற்ற தொடங்கியுள்ள நிலையில், கல்வித்துறையில் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ஆற்றிய பணிகள் நம் அனைவருக்கும் உத்வேகம் அளிப்பதாக கூறினார். தேசிய விருது பெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் நான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

ஆசிரியர்களின் அரப்பணிப்புக் குறித்து எடுத்துரைத்த பிரதமர், நேர்மறை சிந்தனையுடன் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு அவர்களுடன் உழைக்க வேண்டும் என்று கூறினார். ஆசிரியரின் பங்கு என்பது மனிதர்களின் வாழ்வில் வெளிச்சத்தை ஏற்படுத்தி அவர்களின் கனவுகளை நனவாக்கும் வகையில் கற்பிப்பதாகும்.

2047-ஆம் ஆண்டு இந்தியாவின் நிலை குறித்து குறிப்பிட்ட பிரதமர், இது மாணவர்களைச் சார்ந்தது என்றும், அவர்களுடைய எதிர்காலம் இன்றைய ஆசிரியர்கள் மூலம், உருவாக்கப்படுவதாகவும், பிரதமர் தெரிவித்தார். எனவே, மாணவர்களின் வாழ்க்கையை சிறப்படையச் செய்ய நீங்கள் உதவுவதாகவும், அத்துடன் நாட்டிற்கு பங்களிப்பதாகவும் அவர் கூறினார்.  மாணவர்களின் கனவுகளுடன் ஆசிரியர் ஒன்றிணையும் போது அவர் வெற்றி பெறுவதாகவும் தெரிவித்தார்.

பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களிடையே  மோதலையும் முரண்பாடுகளையும் களைவது முக்கியம் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார். பள்ளி, சமூகம் மற்றும் வீடுகளில் மாணவர்கள் மோதலை கடைப்பிடிக்கக் கூடாது என்றும் அவர் கூறினார். மாணவர்களின் நலன் கருதி, ஆசிரியர்களும் மாணவர்களின்  குடும்பத்தினரும் ஒருங்கிணைந்த அணுகுமுறையை மேற்கொள்வதன் அவசியம் குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.  மாணவர்களுடன் விருப்பு வெறுப்புகளை  கடைப்பிடிக்காமல் அனைத்து மாணவர்களையும், சமமாக நடத்துமாறு அவர் அறிவுறுத்தினார்.

புதிய கல்விக் கொள்கை குறித்து கிடைத்துள்ள வரவேற்பை சுட்டிக்காட்டிய பிரதமர், அது சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாகக் கூறினார். தேசியக் கல்விக் கொள்கையை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை படிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், மகாத்மா காந்தி பகவத் கீதையை பலமுறை படித்து, ஒவ்வொரு முறையும் ஒரு புதிய அர்த்தத்தைக் கண்டறிந்ததாகக் கூறினார். மாணவர்களின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு அரசு உருவாக்கியுள்ள தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமாகும் என்றும் பிரதமர் தெரிவித்தார். இக்கொள்கையை உருவாக்கியதில் ஆசிரியர்கள் பெரும் பங்கு வகித்ததாக அவர் கூறினார். புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் ஆசிரியர்களுக்கு முக்கிய பொறுப்புள்ளதாகவும் தெரிவித்தார். 

தமது சுதந்திர தின உரையின்போது குறிப்பிட்ட ஐந்து தீர்மானங்கள் குறித்து நினைவு கூர்ந்த பிரதமர், இவற்றை பள்ளிகளில் வழக்கமாக விவாதிக்கலாம் என்றும் கருத்துத் தெரிவித்தார். நாட்டின் வளர்ச்சிக்காக இந்த தீர்மானங்கள் பாராட்டப்படுவதாகக் கூறிய அவர், குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் அவற்றை கற்பிப்பதற்கான வழிவகைகளை காணுவது அவசியம் என்று தெரிவித்தார். 2047-ஆம் ஆண்டுக்கான கனவை காணாமல் நாட்டில் உள்ள எந்தவொரு மாணவரும் இருந்துவிடக் கூடாது என்று பிரதமர் கூறினார். தண்டி யாத்திரைவெள்ளையனே வெள்ளையேறு இயக்கம் நடைபெற்ற காலத்தில் நாட்டில் இருந்த உத்வேகத்தை மீண்டும் ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார்.

உலகில் பொருளாதார வளர்ச்சியில் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ள இந்தியாவின் சாதனை குறித்து பிரதமர் குறிப்பிட்டார். சுமார் 250 வருடங்களுக்கு மேலாக  இந்தியாவை ஆட்சி  செய்த அவர்களைவிட பொருளாதாரத்தில் ஆறாம் இடத்திலிருந்து ஐந்தாம் இடத்திற்கு முன்னேறியது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் தெரிவித்தார். இல்லம் தோறும் மூவண்ணக் கொடி இயக்கம் மூலம் உலகில் இன்று இந்தியா புதிய  உச்சத்தை எட்டியுள்ளதாகவும், இந்த உத்வேகம் இன்று தேவை என்றும் அவர் கூறினார். சுதந்திரத்திற்காக பிரிட்டிஷ்கார்களுடன் ஒவ்வொரு இந்தியரும், 1930ஆம் ஆண்டு முதல் 1942-ம் ஆண்டு வரை கடைபிடித்த அதே உத்வேகத்தை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.  நான் எனது நாட்டை பின்தங்கியிருக்கச் செய்ய மாட்டேன் என்றும் குறிப்பிட்டார்.  ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து அடிமைத் தனத்தை நாம் ஒழித்துக் கட்டியுள்ளோம் என்றும் தற்போது இதை நாம் நிறுத்தவிடக் கூடாது என்றும் கூறிய பிரதமர், நாம் முன்னோக்கி மட்டுமே செல்ல வேண்டும் என்றும் கூறினார்.

பிரதமர் தனது உரையை நிறைவு செய்யும் போது, ​​இந்தியாவின் திறன் பன்மடங்கு வளர, எதிர்கால இந்தியாவிற்காக  இதே போன்ற உணர்வை ஒருங்கிணைக்குமாறு  ஆசிரியர்களை வலியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய கல்வித்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

*****

 

 


(Release ID: 1856909) Visitor Counter : 220