பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு
azadi ka amrit mahotsav

இந்தியா@ 100 போட்டித்தன்மை பெருந்திட்டத்தை பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழு வெளியிட்டுள்ளது

Posted On: 30 AUG 2022 1:25PM by PIB Chennai

இந்தியா@100 போட்டித்தன்மை பெருந்திட்டத்தை பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழு இன்று வெளியிட்டது. அக்குழுவின் தலைவர் டாக்டர் பிபேக் தெப்ராய், உறுப்பினர் திரு சஞ்சீவ் சன்யால் உள்ளிட்டோர் வெளியிட்டனர். பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு போட்டிக்கான மையத்தின் தலைவர் டாக்டர் அமித் கபூர், பேராசிரியர் மைக்கேல் இ போர்ட்டர், ஹார்வர்டு வணிகப் பள்ளியைச் சேர்ந்த டாக்டர் கிறிஸ்டியன் கெட்டல்ஸ் உள்ளிட்டோர் வெளியிட்டனர்.  எதிர்வரும் காலங்களில் நாட்டின் வளர்ச்சிப் பயணத்திற்கு தேவையான புதிய வழிகாட்டு நெறிமுறைகள், பல்வேறு மாநிலங்கள் மற்றும் அமைச்சகங்களுக்கான வழிகாட்டுதல்கள் ஆகியவை இந்தப் பெருந்திட்டத்தில் இடம் பெற்றுள்ளது.

பேராசிரியர் மைக்கேல் இ போர்ட்டர் உருவாக்கிய போட்டித்தன்மை கட்டமைப்பின் அடிப்படையில், இந்தியா@100 போட்டித்தன்மை பெருந்திட்டம்  அமைந்துள்ளது.

நாட்டின் 100-வது ஆண்டை நோக்கிய பயணத்தில் மிகப் பெரிய ஆற்றலையும், விருப்பங்களையும் நனவாக்க தேவைப்படும் நடவடிக்கைகளை அடையாளம் காண்பதற்கான வழித்தடமாக இந்தியா @100 பெருந்திட்டம் இருக்கும். 2047-ஆம் ஆண்டுக்குள் அதிக வருவாய் ஈட்டக் கூடிய நாடாக இந்தியாவை திகழச் செய்வதற்கான வழிவகைகள் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூகம் மற்றும் பொருளாதார திட்டங்களை ஒருங்கிணைத்து புதிய மேம்பாட்டு அணுகுமுறை மற்றும் ஒட்டுமொத்த செயல்திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை இந்தப்பெருந்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் தற்போதைய பொருளாதார நிலை, போட்டித் தன்மையில் ஆதாயங்கள் ஆகியவற்றை முழுமையாக ஆய்வு செய்வதன் அடிப்படையில், முன்னுரிமை அளிக்கப்பட்ட முன்முயற்சிகளின் ஒருங்கிணைந்த செயல்திட்டத்தையும் இந்தப் பெருந்திட்டம் கொண்டுள்ளது. சமீப ஆண்டுகளில் அரசு செயல்படுத்தியுள்ள பல சீர்திருத்தங்களின் அடிப்படையில், இது தற்போது இந்தியாவிற்கு தேவைப்படும் செயல்பாடுகள், பற்றியும், இந்த செயல்பாடுகளை தீவிரமாக தாமே நிறைவேற்றுவதற்கான கட்டமைப்பின் தேவைகள் எவை என்பதையும் எடுத்துரைக்கிறது.

 

***************



(Release ID: 1855460) Visitor Counter : 291