மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
எட்டு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களின் குழுமத்துடன் பேச்சுவார்த்தையில் திரு தர்மேந்திர பிரதான் பங்கேற்றார்
Posted On:
24 AUG 2022 4:23PM by PIB Chennai
ஆஸ்திரேலியா – இந்தியா இடையேயான கூட்டு ஆராய்ச்சி பணிகளை வெற்றிகரமாக நடைபெறச் செய்வது குறித்து மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், ஆஸ்திரேலியாவின் எட்டு முன்னணி பல்கலைக்கழகங்களின் கல்வியாளர்களுடன் இன்று பேச்சு நடத்தினார்.
அப்போது பேசிய அவர், இந்தியா-ஆஸ்திரேலியா இடையே மேலும் கூட்டு ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ள எட்டு பல்கலைக்கழகங்களுக்கும் அழைப்பு விடுத்தார். அனைத்து துறைகளிலும் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்வதற்கான முயற்சிகளில் இந்தியா ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
பின்னர், மெல்பர்னில் படித்து வரும் இந்திய மாணவர்களுடன் திரு பிரதான் நேரடியாக உரையாடினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1854137
•••••
(Release ID: 1854156)
Visitor Counter : 161