சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
ஆபத்தான அல்லது அபாயகரமான சரக்குகளை ஏற்றி செல்லும் வாகனங்களின் இருப்பிட கண்காணிப்பு சாதனம் தொடர்பான அறிவிக்கை
Posted On:
23 AUG 2022 2:44PM by PIB Chennai
ஆர்கான், நைட்ரஜன், ஆக்சிஜன் உள்ளிட்ட பல்வேறு வாயுக்கள் மற்றும் ஆபத்தான அல்லது அபாயகரமான சரக்குகளை ஏற்றி கொண்டு தேசிய அளவில் செல்லும் வாகனங்களில், வாகன இருப்பிட கண்காணிப்பு சாதனங்கள் பொருத்தப்படவில்லை என்று, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து, ஆகஸ்ட் 3 2022 தேதியிட்ட பொதுசட்ட விதிகள் 617 (இ), மற்றும் என்2 மற்றும் என்3 ஆகிய பிரிவுகளின்கீழ், ஒவ்வொரு வாகனமும், செப்டம்பர் 1 2022 அல்லது அதற்கு பிறகும் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. புதிய மாடல்கள் விவகாரத்தில், ஜனவரி 1 2023 அன்று, ஏற்கனவே உள்ள வாகனங்களில் ஆபத்தான அல்லது அபாயகரமான சரக்குகளை ஏற்றி செல்லும் வாகனங்களில் AIS140-ன்படி, வாகன கண்காணிப்பு சாதனம் பொருத்தப்பட்டிருக்கும்.
மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1853834
***************
Release ID: 1853834
(Release ID: 1853845)
Visitor Counter : 171