பிரதமர் அலுவலகம்

20 வயதிற்கு உட்பட்டோருக்கான உலக சாம்பியன் பட்டப் போட்டியில் 16 பதக்கங்கள் வென்ற இந்திய மல்யுத்த வீரர்கள் குழுவுக்கு பிரதமர் பாராட்டு

Posted On: 22 AUG 2022 10:18PM by PIB Chennai

 20 வயதிற்கு உட்பட்டோருக்கான உலக சாம்பியன்  பட்ட போட்டியில் 16 பதக்கங்கள் வென்ற (ஆடவர் மற்றும் மகளிர் ஃப்ரீஸ்டைல் பிரிவில் தலா 7 மற்றும் கிரேக்கோ-ரோமன் பிரிவில் 2) இந்திய மல்யுத்த வீரர்கள் குழுவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

 ட்விட்டர் பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது:-

 “நமது மல்யுத்த வீரர்கள் மீண்டும் நமக்கு பெருமை தேடித் தந்துள்ளனர். 20 வயதிற்கு உட்பட்டோருக்கான உலக சாம்பியன் பட்டப் போட்டியில் 16 பதக்கங்கள் வென்ற (ஆடவர் மற்றும் மகளிர் ஃப்ரீஸ்டைல் பிரிவில் தலா 7 மற்றும் கிரேக்கோ-ரோமன் பிரிவில் 2) இந்திய மல்யுத்த வீரர்கள் குழுவுக்கு வாழ்த்துக்கள். இது இந்தியாவின் மிகச் சிறப்பான செயல்பாடு. எதிர்கால இந்திய மல்யுத்தம், பாதுகாப்பான கரங்களில் இருப்பதை இது உணர்த்துகிறது.”

***************

(Release ID: 1853712)



(Release ID: 1853777) Visitor Counter : 156