ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பட்டுக் குறியீடு கண்காட்சியை தொடங்கி வைத்துப் பேசிய மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் திருமதி தர்ஷனா ஜர்தோஷ், பட்டு ஊக்குவிப்பையும், இந்திய பட்டின் தரத்தை உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பிரபலப்படுத்துவதுடன் பட்டுக் குறியீடு நோக்கமாகக் கொண்டுள்ளது என்று தெரிவித்தார்

Posted On: 22 AUG 2022 2:52PM by PIB Chennai

மத்திய அரசின் ஜவுளித் துறை அமைச்சகம் மற்றும் மத்திய பட்டு வாரியம் சார்பில் இந்தியப் பட்டு குறியீடு அமைப்பு கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் திருமதி தர்ஷனா ஜர்தோஷ், இன்று இதனைத் தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், பட்டு ஊக்குவிப்பையும், இந்திய பட்டின் தரத்தை உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பிரபலப்படுத்துவதுடன் பட்டுக் குறியீடு நோக்கமாகக் கொண்டுள்ளது என்று தெரிவித்தார்.

இந்தக் குறியீடு பட்டு நுகர்வோரின் நலனை கருத்தில் கொள்வதோடு விவசாயிகள் தூய பட்டு விற்பனையாளர்கள் உள்ளிட்டவர்களின் நலனையும் பாதுகாக்கிறது என்று கூறினார்.

நமது பாரம்பரியத்தைப் பாதுகாக்க பெண் நெசவாளர்களுக்கு அதிகாரமளித்தல் பட்டுத்துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு சிறந்த வாய்ப்புகளை அளித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்தக் கண்காட்சி நடத்தப்படுகிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.

கண்காட்சியாளர்கள் மற்றும் நெசவாளர்களிடம் உரையாடிய திருமதி ஜர்தோஷ் பட்டு உற்பத்திப் பொருட்களை வாங்கினார்.

புதுதில்லியில் நடைபெற்று வரும் இந்தக் கண்காட்சியில் 12 மாநிலங்களைச் சேர்ந்த 39 கண்காட்சியாளர்கள் தங்களது உற்பத்திப் பொருட்களை காட்சிக்கு வைத்துள்ளனர்.  இன்று தொடங்கிய இந்தக் கண்காட்சி இம்மாதம் 28ம் தேதி வரை நடைபெற உள்ளது.
மேலும் விவரங்களுக்கு  இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1853577 

***************


(Release ID: 1853607) Visitor Counter : 242