உள்துறை அமைச்சகம்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பேருந்து விபத்தில் காயமடைந்த வீரர்களின் உடல்நலம் குறித்து புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவமனை சென்று மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா விசாரித்தார்

Posted On: 20 AUG 2022 4:53PM by PIB Chennai

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த பேருந்து விபத்தில் காயமடைந்த துணிச்சலான இந்தோ-திபெத் எல்லைக்காவல் படை வீரர்களின் உடல் நலம் குறித்து விசாரிக்க மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று புது தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு  சென்றார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மூன்று வீரர்களை சந்தித்த அவர், அவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்தினார். படுகாயமடைந்த இந்த மூன்று வீரர்களும் சிறப்பு விமான ஆம்புலன்ஸ் மூலம் நேற்று ஸ்ரீநகரில் இருந்து புதுதில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

வீரர்களின் உடல்நிலை மற்றும் எதிர்காலத்தில் பின்பற்ற வேண்டிய மருத்துவ சிகிச்சைகள் குறித்து உள்துறை அமைச்சரிடம் மருத்துவர்கள் விளக்கினர்.

ஆகஸ்ட் 16 அன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் அருகே பேருந்து விபத்தில் ஏழு வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 32 பேர் காயமடைந்தனர். பேருந்தில் பயணம் செய்த இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையினர் அமர்நாத் யாத்திரைக்கான பணிகளை வெற்றிகரமாக முடித்துவிட்டு சந்தன்வாடியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த போது விபத்து நேரிட்டது.

 ***************(Release ID: 1853331) Visitor Counter : 184