கலாசாரத்துறை அமைச்சகம்
இல்லந்தோறும் மூவண்ணக்கொடி வலைதளத்தில் 6 கோடிக்கும் மேற்பட்ட மூவண்ணக்கொடி செல்ஃபி படங்கள் பதிவேற்றம்
சண்டிகரில் 5,885 பேர் கலந்து கொண்டு தேசிய கொடியை அசைத்த நிகழ்ச்சி கின்னஸ் உலக சாதனை படைத்தது
प्रविष्टि तिथि:
16 AUG 2022 4:05PM by PIB Chennai
இந்தியாவின் 75 ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், இல்லந்தோறும் மூவண்ணக்கொடியை ஏற்றும் பிரச்சாரத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் மக்களின் உள்ளத்தில் நாட்டுப்பற்று உணர்வை வலுப்படுத்தும் நோக்கத்தில் இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் நாடு முழுவதும் மக்கள் முழுமையான எழுச்சியுடன் கலந்து கொண்டனர். சண்டிகரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் 5885 பேர் கலந்து கொண்டு தேசிய கொடியை அசைத்து மகிழ்ந்த நிகழ்ச்சி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதற்கிடையே, மகத்தான சாதனையாக இல்லந்தோறும் மூவண்ணக்கொடி வலைதளத்தில் 6 கோடிக்கும் மேற்பட்ட மூவண்ணக்கொடி செல்ஃபி படங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன.
இந்த சாதனை பற்றி குறிப்பிட்டுள்ள கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சம் திரு கிஷன் ரெட்டி, கடமை உணர்வு கொண்ட இந்தியர்களின் நாடு முதலில் என்ற கூட்டு முயற்சியை இது பிரதிபலிப்பதாக கூறியுள்ளார். இந்த பிரச்சாரத்தின் நாடு முழுவதும் மக்கள் கலந்து கொண்டு இதனை பெரும் வெற்றியடைய செய்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற உற்சாகம், இந்தியாவின் அசைக்க முடியாத ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எடுத்துக்காட்டாகும் என்று அவர் தெரிவித்தார். பிரதமரின் அறைகூவலை ஏற்று இந்த பிரச்சாரத்தில் பங்கேற்ற அனைவருக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1852264
(रिलीज़ आईडी: 1852287)
आगंतुक पटल : 234