உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

முன்னாள் பிரதமர் பாரத ரத்னா அடல்பிகாரி வாஜ்பாயின் நினைவு நாளில் புதுதில்லியில் உள்ள நினைவிடத்தில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா மரியாதை

प्रविष्टि तिथि: 16 AUG 2022 1:11PM by PIB Chennai

முன்னாள் பிரதமர் பாரத ரத்னா அடல்பிகாரி வாஜ்பாயின் நினைவு நாளான இன்று, புதுதில்லியில் உள்ள அவரது  நினைவிடத்தில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா மரியாதை செலுத்தினார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

தாய் நாட்டின் பெருமையை பாதுகாக்க, அடல்ஜி தனது வாழ்நாளில் ஒவ்வொரு தருணத்தையும் செலவழித்தார். இந்திய அரசியலில் ஏழைகள் நலன் மற்றும் சிறந்த நிர்வாகத்துக்கான புதிய யுகத்தை அவர் தொடங்கினார். அதேசமயம், இந்தியாவின் வலிமையையும், துணிச்சலையும் உலகம் உணருமாறு அவர் செய்தார். அவரது நினைவு நாளில் அவருக்கு மரியாதை செலுத்தினேன்.

***************

(Release ID: 1852220)


(रिलीज़ आईडी: 1852238) आगंतुक पटल : 243
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam