உள்துறை அமைச்சகம்
76-வது சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா வாழ்த்து
प्रविष्टि तिथि:
15 AUG 2022 11:36AM by PIB Chennai
76-வது சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். இது, கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலான இந்தியாவின் கலாச்சாரம், எழுச்சிமிகு ஜனநாயக பாரம்பரியம், சாதனைகள் குறித்து பெருமைகொள்ளும் தினம். நமக்கு சுதந்திரம் வாங்கித்தந்த நமது சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும், நாட்டின் பாதுகாப்புக்காக அனைத்தையும் தியாகம் செய்த நமது துணிச்சல்மிக்க வீரர்களுக்கும் நான் மரியாதை செலுத்துகிறேன் என திரு அமித் ஷா கூறியுள்ளார்.
வலுவான, தன்னிறைவு மிக்க இந்தியாவை கனவு கண்ட நமது தீரம் மிக்க விடுதலைப் போராட்ட வீரர்களின் கனவை, நாட்டு நலனுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதன் மூலம், பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றி வருகிறார். இந்திய சுதந்திரத்தின் நூற்றாண்டு விழா தருணத்தில் இந்தியாவை மீண்டும் விஸ்வ குருவாக மாற்றுவதற்கு, கடின உழைப்பின் மூலம், தொடர்ந்து வளர்ச்சிப் பாதைக்கு அனைவரும் பங்களிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
***************
(रिलीज़ आईडी: 1851997)
आगंतुक पटल : 252