உள்துறை அமைச்சகம்
இல்லம் தோறும் மூவண்ணக்கொடி ஏற்ற வேண்டும் என்ற பிரதமரின் அழைப்பை ஏற்று மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா புதுதில்லியில் உள்ள தமது இல்லத்தில் தேசியக்கொடி ஏற்றினார்
प्रविष्टि तिथि:
13 AUG 2022 11:35AM by PIB Chennai
இல்லம் தோறும் மூவண்ணக்கொடி ஏற்ற வேண்டும் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா புதுதில்லியில் உள்ள தமது இல்லத்தில் தேசியக்கொடி ஏற்றினார். தாய் நாட்டுக்காக அனைத்தையும் தியாகம் செய்த பல்வேறு வீரர்களுக்கு அவர் மரியாதை செலுத்தினார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவுகளில், ‘’ மூவண்ணக்கொடி நமது பெருமை. அது ஒவ்வொரு இந்தியனையும் ஒன்றுபடுத்தி ஊக்கமளிக்கிறது. மூவண்ணக்கொடி ஏற்றுமாறு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் விடுத்த அழைப்புக்கிணங்க, இன்று புதுதில்லியில் உள்ள எனது இல்லத்தில் தேசியக்கொடி ஏற்றியதுடன், தாய் நாட்டுக்காக அனைத்தையும் தியாகம் செய்த பல்வேறு வீரர்களுக்கு மரியாதை செலுத்தினேன்’’ என்று கூறியுள்ளார்.
நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை மூவண்ணக்கொடியை ஏற்றி, ஒவ்வொரு உள்ளத்திலும் நாட்டுப்பற்றை ஏற்படுத்தும் விழிப்புணர்வு இயக்கத்தில் பங்கேற்க வேண்டும். மேலும் மூவண்ணக்கொடியுடன் உள்ள புகைப்படத்தை http://harghartiranga.com தளத்தில் பதிவேற்றி மற்றவர்களுக்கு ஊக்கமேற்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
***************
(रिलीज़ आईडी: 1851480)
आगंतुक पटल : 245