வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய அறிவுசார் சொத்து விழிப்புணர்வு இயக்கம், ஒரு மில்லியன் மாணவர்களுக்கு, அறிவுசார் சொத்து விழிப்புணர்வுக் குறித்து பயிற்சி அளிக்கும் இலக்கை அடைந்துள்ளது

प्रविष्टि तिथि: 11 AUG 2022 4:00PM by PIB Chennai

தேசிய அறிவுசார் சொத்து விழிப்புணர்வு இயக்கம், 2022 ஆகஸ்ட் 15 காலக்கெடுவுக்குள், 2022 ஜூலை 31 நிலவரப்படி, ஒரு மில்லியன் மாணவர்களுக்கு, தேசிய அறிவுசார் சொத்து குறித்த விழிப்புணர்வு மற்றும் அடிப்படைகள் குறித்த பயிற்சி அளிப்பதற்கான இலக்கை எட்டியுள்ளது.

அறிவுசார் சொத்து விழிப்புணர்வு மற்றும் அடிப்படை பயிற்சிகளை வழங்குவதற்கான முதன்மை திட்டமான, தேசிய அறிவுசார் சொத்து விழிப்புணர்வு இயக்கம், சுதந்திரதின அமிர்தப் பெருவிழா கொண்டாட்டங்களின் ஒருபகுதியாக, 2021 டிசம்பர் 8 அன்று தொடங்கப்பட்டது. வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், காப்புரிமைகள், வடிவங்கள் மற்றும் வணிக இலச்சினைகள் மற்றும் காப்புரிமை கட்டுப்பாட்டார் பொதுஅலுவலகமான அறிவுசார் சொத்து அலுவலகத்தால் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1850898

 

***************


(रिलीज़ आईडी: 1850939) आगंतुक पटल : 451
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Telugu , Malayalam