பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பெண்களுக்கான 76 கிலோ மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பூஜா சிஹாகிற்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 07 AUG 2022 8:21AM by PIB Chennai

பெர்மிங்ஹாமில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகள் 2022-இல் பெண்களுக்கான 76 கிலோ மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பூஜா சிஹாகிற்கு   பிரதமர்  திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:

திறமையான மல்யுத்த வீரராக பூஜா சிஹாக் முத்திரை பதித்துள்ளார். தமது விடா முயற்சியால் ஏராளமான சவால்களை அவர் எதிர்கொண்டுள்ளார். காமன்வெல்த் போட்டிகள் 2022-இல் அவர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். அவருக்கு வாழ்த்துகள். வருங்காலங்களிலும் இந்தியாவிற்கு அவர் பெருமை தேடித் தருவார் என்று நான் நம்புகிறேன். #Cheer4India

**********


(Release ID: 1849295) Visitor Counter : 156