தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இல்லம் தோறும் மூவண்ணக்கொடி ஏற்றும் பிரச்சாரம்: தேசியக்கொடி விற்பனைக்காக சுதந்திர தினம் வரை விடுமுறை நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும் அஞ்சல் நிலையங்கள் திறந்திருக்கும்

प्रविष्टि तिथि: 06 AUG 2022 6:30PM by PIB Chennai

இல்லம் தோறும் மூவண்ணக்கொடி ஏற்றும்  பிரச்சாரத்தின் கீழ் தேசியக் கொடிகளின் விற்பனை மற்றும் விநியோகத்தை எளிதாக்க, அனைத்து அஞ்சல் நிலையங்களும்  சுதந்திர தினத்திற்கு முன் விடுமுறை நாட்களில் செயல்படும்.

நாடு முழுவதும் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்கள் மற்றும் பிற முக்கிய தபால் நிலையங்கள் இந்த பொது பிரச்சாரத்தை செயல்படுத்தும்  அளவிற்கு செயல்படும்.

பொது விடுமுறை நாட்களில் தேசியக் கொடிகள் விற்பனைக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். 2022 ஆகஸ்ட் 7, 9 மற்றும் 14 தேதிகளில் அஞ்சல்  நிலையங்களில் குறைந்தபட்சம் ஒரு கவுன்டர் மூலம், தேசியக் கொடிகளை விநியோகிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.

***


(रिलीज़ आईडी: 1849161) आगंतुक पटल : 316
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Punjabi , Odia , Kannada