பிரதமர் அலுவலகம்
பெர்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டிகள் 2022-இல் தங்கப் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் தீபக் புனியாவிற்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
06 AUG 2022 12:10AM by PIB Chennai
பெர்மிங்ஹாமில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகள் 2022-இல் தங்கப் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் தீபக் புனியாவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“நமது தீபக் புனியாவின் தலைசிறந்த விளையாட்டு செயல்திறனைக் கண்டு மிகுந்த பெருமிதம் கொள்கிறேன். அவர் இந்தியாவின் பெருமை மட்டுமல்லாமல், நாட்டிற்குப் புகழையும் தேடித் தந்துள்ளார். தங்கம் வென்று இந்தியர்கள் அனைவரையும் அவர் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளார். அவரது எதிர்கால முயற்சிகள் அனைத்திற்கும் நல்வாழ்த்துகள்.”
***************
(வெளியீட்டு அடையாள எண்: 1849045)
வருகையாளர் எண்ணிக்கை : 249
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam