சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

`சுதந்திரத்தின் 75-ஆவது ஆண்டுப் பெருவிழாவை’ கொண்டாடும் வகையில், நாடு முழுவதும் மரக்கன்றுகள் நடும் இயக்கத்திற்கு இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது

प्रविष्टि तिथि: 15 JUL 2022 2:28PM by PIB Chennai

`சுதந்திரத்தின் 75-ஆவது ஆண்டுப் பெருவிழாவை’ கொண்டாடும் வகையில், நாடு முழுவதும் 2022  ஜூலை 17அன்று மரக்கன்றுகள் நடும் இயக்கத்திற்கு இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. ஒரே நாளில் நாடு முழுவதும் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுவது இதன் நோக்கமாகும். தேசிய நெடுஞ்சாலைகள் அருகே உள்ள இடங்கள், சுங்கச்சாவடிப் பகுதிகள், சாலையோரங்கள் என இதற்காக ஆணையத்தின் மண்டல அலுவலகங்கள் 100 இடங்களை  தெரிவு செய்துள்ளன. இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டினை கொண்டாடும் அமிர்தப் பெருவிழாவைக் குறிக்கும் வகையில், 2022 ஆகஸ்ட் 15 வரை 75 லட்சம் மரக்கன்றுகள் நடுவதை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள்  ஆணையம் குறிக்கோளாகக் கொண்டுள்ளது.

மரக்கன்றுகள் நடும் இயக்கத்தில் மத்திய  சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி, அமைச்சகம் மற்றும் ஆணையத்தின் மூத்த அதிகாரிகள் பங்கேற்பார்கள். சுற்றுச்சூழல்  நிலைத்தன்மையின் செய்தியை  பரவலாக்க இந்த இயக்கத்தில், மக்கள் பிரதிநிதிகள், உள்ளூர் சிவில் சமூகத்தினர், தொண்டு நிறுவனங்கள், கல்லூரி மாணவர்களின்  பங்கேற்பு எதிர்பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், அசாம், ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மகளிர் சுயஉதவிக் குழுக்களும் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் பராமரிப்பில் ஈடுபட உள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1841736

***************


(रिलीज़ आईडी: 1841783) आगंतुक पटल : 301
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Manipuri , Odia , English , Gujarati , Urdu , हिन्दी , Marathi , Bengali , Punjabi , Telugu