சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தகுதிவாய்ந்த அனைவருக்கும் அரசு தடுப்பூசி மையங்களில் இலவச முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தும் 75 நாள்- ‘கோவிட் தடுப்பூசி அமிர்த பெருவிழா’ நாளை தொடங்குகிறது

Posted On: 14 JUL 2022 5:25PM by PIB Chennai

தகுதி வாய்ந்த (18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர்) அனைவருக்கும் அரசு தடுப்பூசி மையங்களில் இலவச முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தும் 75 நாள்- கொவிட் தடுப்பூசி அமிர்த பெருவிழா’ நாளை (15 ஜூலை 2022) தொடங்குகிறது. சுதந்திர தின அமிர்த பெருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த சிறப்பு கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணி, ‘ ஒரு இயக்கமாக, நடைமுறைப்படுத்தப்படுகிறது. தகுதியவாய்ந்த (18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர்) அனைவரும் முன்னெச்சரிக்கை தவணை (பூஸ்டர் டோஸ்) தடுப்பூசி செலுத்திக்கொள்வதை அதிகரிக்கும் நோக்கில் இந்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் திரு ராஜேஷ் பூஷன், இன்று  அனைத்து மாநில/ யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத்துறை செயலாளர்கள் மற்றும் தேசிய சுகாதாரத்துறை இயக்கத்தின் நிர்வாக இயக்குனர்களுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடினார். அப்போது, முன்னெச்சரிக்கை தவணை செலுத்திக்கொள்வதன் மூலம்,  தகுதிவாய்ந்த அனைவருக்கும் முழுமையாக கொவிட்- 19 தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரமாக மேற்கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தினார். 18வயதுக்கு மேற்பட்டவர்களில் 8 சதவீதத்தினரும், 60மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரில் 27 சதவீதத்தினர் மட்டுமே முன்னெச்சரிக்கை  தவணை தடுப்பூசி செலுத்தியிருப்பது கவலையளிக்கத்தக்கது என்றும் குறிப்பிட்டார்.

எனவே, மத்திய அரசு அறிவித்துள்ளபடி, அனைத்து அரசு கொவிட் தடுப்பூசி மையங்களிலும் 15 ஜூலை 2022 முதல்  30 செப்டம்பர் 2022 வரை 75 நாட்களுக்கு இலவசமாக முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்துவதை ஒரு இயக்கமாக மேற்கொள்ளுமாறும் திரு ராஜேஷ் பூஷன் கேட்டுக்கொண்டுள்ளார்.

மாநிலங்களிடம் கையிருப்பில் உள்ள கொவிட் தடுப்பூசிகளை, அவை காலாவதி ஆகாமல், உரிய காலத்திற்குள் செலுத்துவதை உறுதி செய்யுமாறும், அவர் அறிவுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில  செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1841501

 

***************


(Release ID: 1841549) Visitor Counter : 277