பிரதமர் அலுவலகம்
இன்றைய அமைச்சரவையின் முடிவு, இந்தியாவின் தடுப்பூசி வழங்கலை மேம்படுத்தி, சுகாதாரமான நாட்டை உருவாக்கும்: பிரதமர்
प्रविष्टि तिथि:
13 JUL 2022 10:13PM by PIB Chennai
ஜூலை 15, 2022 முதல் அடுத்த 75 நாட்களுக்கு அரசு மையங்களில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொவிட்-19 முன்னெச்சரிக்கை டோசை இலவசமாக வழங்கும் முடிவு, இந்தியாவின் தடுப்பூசி வழங்கலை மேம்படுத்தி, சுகாதாரமான நாட்டை உருவாக்கும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் விடுதலையின் 75ஆம் ஆண்டை கொண்டாடும் அமிர்த பெருவிழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, இந்த முடிவு எடுக்கப்பட்டது.
மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியாவின் ட்விட்டர் செய்திக்கு பதில் அளித்து ட்வீட் செய்துள்ள பிரதமர், “கொவிட்-19 தொற்றுக்கு எதிராக போராடுவதில் தடுப்பூசி மிகுந்த பயனளிக்கிறது. இன்றைய அமைச்சரவையின் முடிவு, இந்தியாவின் தடுப்பூசி வழங்கலை மேம்படுத்தி, சுகாதாரமான நாட்டை உருவாக்கும்”, என்று தெரிவித்தார்.
***************
(रिलीज़ आईडी: 1841434)
आगंतुक पटल : 175
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam