பிரதமர் அலுவலகம்

பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் நெதர்லாந்து பிரதமர் மேன்மை தங்கிய திரு மார்க் ரூட்டே இடையே தொலைபேசி உரையாடல்

Posted On: 13 JUL 2022 6:50PM by PIB Chennai

நெதர்லாந்து பிரதமர் மேன்மை தங்கிய திரு மார்க் ரூட்டே-யுடன்  பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொலைபேசியில்  உரையாடினார்.

தண்ணீர் குறித்த உத்தி வகுத்தலில் பங்களிப்பு, வேளாண்மையின் முக்கிய பிரிவுகளில்  ஒத்துழைப்பு, உயர்தொழில்நுட்பம் மற்றும் வளர்ந்து வரும் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்புக்கான ஆர்வம் உட்பட இந்தியா – நெதர்லாந்து இடையேயான இருதரப்பு உறவுகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். இந்தியா – ஐரோப்பிய ஒன்றிய உறவுகள், இந்தியா பசிபிக் பகுதியில் ஒத்துழைப்பு உள்ளிட்ட பிராந்திய மற்றும் உலகளாவிய விஷயங்களில் இருதலைவர்களும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

தொடர்ச்சியான உயர்நிலை பயணங்கள் மற்றும் கலந்துரையாடல்களுடன் இந்தியா – நெதர்லாந்து உறவுகள் அண்மை ஆண்டுகளில் பிரமாண்டமான வளர்ச்சியை பெற்றுள்ளன. 2021 ஏப்ரல் 9 அன்று இரு பிரதமர்களும், இணையவழி உச்சிமாநாட்டில் பங்கேற்றனர். பின்னர், தொடர்ச்சியாக பேசி வருகின்றனர்.  இந்த இணையவழி உச்சிமாநாட்டின் போது நெதர்லாந்துடன் தண்ணீர் குறித்த உத்தி வகுத்தல் பங்களிப்பு தொடங்கப்பட்டது.

இந்த ஆண்டில் இந்தியாவும் நெதர்லாந்தும் தூதரக உறவுகள் ஏற்படுத்தப்பட்டதன் 75-வது ஆண்டினை கூட்டாக நினைவுகூர்கின்றன. இந்த சிறப்பான அம்சம் 2022 ஏப்ரல் 4 முதல் 7 வரை நெதர்லாந்துக்கு குடியரசுத் தலைவரின் அரசுமுறைப் பயணத்தின் மூலம் கொண்டாடப்பட்டது.

***************



(Release ID: 1841298) Visitor Counter : 161