பிரதமர் அலுவலகம்

ஜூலை 10ஆம் தேதி இயற்கை வேளாண் மாநாட்டில் பிரதமர் உரையாற்றுகிறார்

Posted On: 09 JUL 2022 10:47AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, நாளை (ஜூலை 10 ஆம் தேதி) காலை 11:30 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் இயற்கை விவசாய மாநாட்டில் உரையாற்றுகிறார்.

விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாக, 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் குஜராத் பஞ்சாயத்து மகாசம்மேளனத்தில்  பிரதமர் ஆற்றிய  உரையில் ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தது 75 விவசாயிகளையாவது இயற்கை விவசாயத்தை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். பிரதமரின் இந்த தொலைநோக்குப் பார்வையால் வழிநடத்தப்பட்டு, சூரத்  மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் குழுக்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், விவசாய உற்பத்தி சந்தைக் குழுக்கள் (APMC), கூட்டுறவு சங்கங்கள், வங்கிகள் போன்ற பல்வேறு பங்குதாரர்கள் மற்றும் நிறுவனங்களை ஊக்குவிக்கும் ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொண்டது. இதன் விளைவாக, ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் குறைந்தது 75 விவசாயிகள் அடையாளம் காணப்பட்டு, இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள உந்துதலும் பயிற்சியும் அளிக்கப்பட்டது. விவசாயிகள் 90 வெவ்வேறு குழுக்களில் பயிற்சி பெற்றனர். இவ்வாறு, மாவட்டம் முழுவதும் 41,000 க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

குஜராத்தின் சூரத்தில் இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சூரத்தில் இயற்கை விவசாயத்தை ஏற்றுக்கொண்ட ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் அதுதொடர்பான அனைத்து பிரதிநிதிகளின்  பங்கேற்பு  இதனை ஒரு வெற்றிக் கதையாக மாற்றும். இந்த மாநாட்டில் குஜராத் ஆளுநர் முதலமைச்சர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

•••••••••••••



(Release ID: 1840317) Visitor Counter : 215