சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
தேசிய சுகாதார ஆணையம் அதன் முதன்மைத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷனின் (ஏடிபிஎம்) சுகாதார வசதிப் பதிவேட்டில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான அரசு மற்றும் தனியார் சுகாதாரப் பராமரிப்பு வசதிகளை வெற்றிகரமாக பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது
Posted On:
06 JUL 2022 5:05PM by PIB Chennai
ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷனின் கீழ் அரசு மற்றும் தனியார் துறை முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதார வசதிகள் வெற்றிகரமாக சுகாதார வசதி பதிவேட்டில் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வரலாற்று மைல்கல், நாடு முழுவதும் டிஜிட்டல் சுகாதார தளம் மற்றும் சேவைகளை அதிக அளவில் ஏற்றுக்கொள்ள வழி வகுக்கிறது.
ஆயுஷ்மான் பாரத் டிஜிடல் மிஷன் என்பது தேசிய சுகாதார ஆணையத்தால் செயல்படுத்தப்படும் அரசாங்கத்தின் முதன்மைத் திட்டமாகும். இதன் கீழ் உருவாக்கப்பட்டுள்ள சுகாதார வசதிப் பதிவேடு நவீன மற்றும் பாரம்பரிய மருத்துவ முறைகளில் நாட்டின் சுகாதார வசதிகளின் விரிவான களஞ்சியமாகும். மருத்துவமனைகள், கிளினிக்குகள், கண்டறியும் ஆய்வகங்கள் மற்றும் இமேஜிங் மையங்கள் உள்ளிட்ட பொது மற்றும் தனியார் சுகாதார வசதிகள் இதில் அடங்கும்.
டிஜிட்டல் சுகாதாரம் சுற்றுச்சூழல் அமைப்பிற்குள் இயங்கும் தன்மையை செயல்படுத்தும் தடையற்ற ஆன்லைன் தளத்தை உருவாக்குவதை ஏடிபிஎம் நோக்கமாகக் கொண்டுள்ளது. சுகாதார வசதிகள், நோயாளிகள் மற்றும் சுகாதார நிபுணர்கள் - அனைத்து பங்குதாரர்களுக்கும் தடையற்ற டிஜிட்டல் சுகாதார அனுபவத்தை வழங்குவதே இதன் நோக்கமாகும்.
பதிவின் முக்கியத்துவத்தை விளக்கிய தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் ஆர்.எஸ். ஷர்மா, "நாடு முழுவதும் பதிவுசெய்யப்பட்ட சுகாதார நிபுணர்கள் மற்றும் சுகாதார வசதிகளின் விவரங்களை நோயாளிகள் எளிதாகப் பெறக்கூடிய நம்பகமான தேசிய தளத்தை உருவாக்குவதே எங்கள் நோக்கம். தற்போது இந்த தேசிய பதிவேட்டின் ஒரு பகுதியாக மாறியுள்ள பொது மற்றும் தனியார் துறை சுகாதார வசதிகளின் உற்சாகமான பங்கேற்பைக் கண்டோம். நவீன மருத்துவம் (அலோபதி), ஆயுர்வேதம், பல் மருத்துவம், ஹோமியோபதி, பிசியோதெரபி, யுனானி, சித்தா போன்ற பல்வேறு மருத்துவ முறைகளில் பதிவுசெய்யப்பட்ட வசதிகளை நோயாளிகள் ஏடிபிஎம் கட்டமைப்பில் எளிதாகத் தேடலாம். இந்த தேசிய பதிவேடுகள் தரமான சுகாதார சேவையை அனைவருக்கும் அணுகக்கூடியதாகவும், மலிவு விலையில் வழங்கவும் உதவும்’’ என்று கூறினார்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1839609
***************
(Release ID: 1839654)
Visitor Counter : 225